அவகாட்ரோ
கருதுகோள்கள்
1811 இல் அவகாட்ரோ
என்ற அறிவியல் அறிஞர் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் அவற்றின் பருமனுக்கும்
இடையேயான தொடர்பினை வெவ்வேறு சூழ்நிலைகளில் கண்டறிந்து அவரது கருதுகோள்களை
வெளியிட்டார்.
அவகாட்ரோ
கூற்றின்படி, “மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம
அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்."
இதன்படி கொடுக்கப்பட்ட வாயுக்களின்
பருமனானது அவ்வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில்
தொடர்புடையதாக இருக்கும். எனில் ‘V’
என்பது பருமனையும் ‘n’ என்பது வாயு
மூலக்கூறுகளின் எண்ணிக்கையையும் குறிப்பதாகக் கொண்டால் அவகாட்ரோ விதிப்படி
V α n
V = மாறிலி × n
ஆகவே 1லி ஹைட்ரஜனில் உள்ள
மூலக்கூறுகளின் எண்ணிக்கை 1லி ஆக்சிஜனில் உள்ள
மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும். இதன்மூலம் வாயுக்களின் பருமனானது
அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத் தொடர்பு கொண்டது என்பது
தெளிவாகிறது.
விளக்கம்
ஹைட்ரஜன் மற்றும் குளோரின் இணைந்து
ஹைட்ரஜன் குளோரைடு உருவாகும் வினையை எடுத்துக் கொள்வோம்.
H2(வாயு) + CI2(வாயு) → 2
HCl(வாயு)
1 பருமன் + 1 பருமன் → 2 பருமன்
அவகாட்ரோ விதிப்படி ஒரு பருமனுள்ள
வாயுக்கள் அனைத்தும் ‘n’
எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை பெற்றிருக்கும். எனவே
n மூலக்கூறு + n
மூலக்கூறு → 2n மூலக்கூறு
n = 1 எனில்
1 மூலக்கூறு + 1 மூலக்கூறு → 2 மூலக்கூறு
½ மூலக்கூறு + ½ மூலக்கூறு → 1 மூலக்கூறு
1 மூலக்கூறு ஹைட்ரஜன்
குளோரைடு என்பது ½ மூலக்கூறு ஹைட்ரஜனையும் ½ மூலக்கூறு குளோரினையும் கொண்டது. இதன்மூலம் மூலக்கூறுகளை பிரிக்க
முடியும் என்பது தெளிவாகிறது. இது டால்டனின் அணுக்கொள்கையை ஒத்திருக்கிறது.
செயல்பாடு 7.3
ஒரே வெப்ப அழுத்த நிலையில் 3 லி O2,
5 லி Cl2 மற்றும் 6 லி H2 ஐ எடுத்துக் கொண்டால்
i. அதிக எண்ணிகையிலான
மூலக்கூறுகளைக் கொண்டிருப்பது எது?
ii. குறைந்த எண்ணிகையிலான
மூலக்கூறுகளைக் கொண்டிருப்பது எது?