அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் - சதவீத இயைபு | 10th Science : Chapter 7 : Atoms and Molecules
சதவீத இயைபு
நாம் இதுவரை, கொடுக்கப்பட்ட
பருப்பொருள்களில் உள்ள துகள்களின் எண்ணிக்கையைப் பற்றிப் படித்தோம். ஆனால்
பெரும்பாலான நேரங்களில் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமங்களின் சதவீத இயைபு
தேவைப்படுகிறது.
சேர்மங்களின் சதவீத இயைபு என்பது 100 கி சேர்மத்தில்
உள்ள ஒவ்வொரு தனிமத்தின் நிறையைக் குறிப்பதாகும். உதாரணமாக நீரில் உள்ள ஹைட்ரஜன்
மற்றும் ஆக்சிஜனின் சதவீத இயைபை கீழ்கண்டவாறு கணக்கிடலாம்.
தனிமத்தின் நிறை சதவீதம்
சதவீத இயைபானது சேர்மங்களின் விகித
வாய்பாடு மற்றும் மூலக்கூறு வாய்பாட்டைக் கண்டறிவதில் பயன்படுகிறது.
சதவீத இயைபு
கணக்கீடுகள் :
எ.கா.கணக்கு 1: மீத்தேனில் உள்ள
தனிமங்களின் சதவீத இயைபை காண்க.
CH4 ன்
மூலக்கூறு நிறை = 12 + 4 = 16 கி