அணுக்களும் மூலக்கூறுகளும் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 7 : Atoms and Molecules
அணுக்களும் மூலக்கூறுகளும் (அறிவியல்)
நினைவில் கொள்க
· ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட
ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும். எ.கா 17Cl35, 17Cl37
· ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட
வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும். எ.கா (18Ar40, 20Ca40).
· ஒரே நியூட்ரான்களின் எண்ணிக்கையையும், வேறுபட்ட அணு எண்களையும், வேறுபட்ட நிறை எண்களையும்
கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும். (6C13, 7N14).
· ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின்
சராசரி அணு நிறைக்கும் C - 12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
· ஒரு தனிமத்தின் சராசரி அணு நிறை என்பது இயற்கையில்
கிடைக்கக்கூடிய அத்தனிமத்தின் ஒவ்வொரு ஐசோடோப்புகளின் சதவீத பரவலை அதன் அணு
நிறையால் பெருக்கிக்கிடைக்கும் மதிப்புகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாகும்.
· ஒப்பு
மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறின் நிறைக்கும், C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
· அவகாட்ரோ
கூற்றின்படி, "மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம
அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்."
· மாறா
வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின்
நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி
எனப்படும்.
· அணுக்கட்டு
எண் = மூலக்கூறு நிறை / அணு நிறை
· ஒப்பு
மூலக்கூறு நிறை = 2 ×
ஆவி அடர்த்தி