அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான வேறுபாடு
அணுக்கள், மூலக்கூறுகளுடைய அடிப்படைத் துகள்களாக இருந்த போதிலும் இவையிரண்டும் பல பண்புகளில் வேறுபடுகின்றன. அட்டவணை 7.5 - இல் அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்குமான பல்வேறு வேறுபாடுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
1. ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி அணு ஆகும்.
2. மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் தனித்த நிலையில் இருப்பதில்லை.
3. மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் வினைத்திறன் மிக்கவை
4. அணுக்களில் வேதிப் பிணைப்புகள் இல்லை
1. தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச் சிறிய பகுதி மூலக்கூறு ஆகும்.
2. மூலக்கூறுகள் தனித்த நிலையில் இருக்கும்.
3. மூலக்கூறுகள் வினைத்திறன் குறைந்தவை
4. மூலக்கூறுகளில் வேதிப் பிணைப்புகள் உள்ளன.