ஆவி
அடர்த்திக்கும் ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் இடையேயான தொடர்பு
ஒரு வாயு அல்லது ஆவியின் ஒப்பு
மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் ஒரு ஹைட்ரஜன்
அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில்
ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன்
அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
அவகாட்ரோ விதிப்படி சமபருமனுள்ள
வாயுக்கள் அனைத்தம் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
ஒரு பருமனுள்ள வாயுவில் 'n' எண்ணிக்கையிலான
மூலக்கூறுகள் உள்ளதாகக் கொண்டால்,
'n' = 1 எனக்
கொண்டால்,
ஹைட்ரஜன், ஈரணு மூலக்கூறு
ஆதலால்
நாம் ஆவி அடர்த்தியை மூலக்கூறு
நிறையுடன் கீழ்கண்டவாறு தொடர்பு படுத்தலாம்.
சமன்பாடு 7.2-ஐ 7.1-இல் பதிலியிட
குறுக்கே பெருக்க
2 × ஆவி அடர்த்தி
= வாயு (அ) ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை
(அ)
ஒப்பு மூலக்கூறு நிறை = 2 × ஆவி அடர்த்தி