இரத்த வகைகள்
காரல்
லேண்ட்ஸ்டீனர்
(1900) இரத்த
வகைகளைக் கண்டறிந்தார். இவர், A, B மற்றும் O
இரத்த வகைகளை அடையாளம் கண்டறிந்தார். டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி
(1902) AB இரத்த வகையினை கண்டறிந்தனர்.
மனித இரத்தத்தில் சில தனிச்
சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் (Ag) மற்றும் அக்ளுட்டினின்
(அ) எதிர்ப்பொருள்கள் (ஆன்ட்டிபாடிகள்) காணப்படுகின்றன.
ஆன்டிஜென்கள் RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன.
எதிர்ப்பொருட்கள் இரத்த
பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள்
காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம். இந்த நான்கு
வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.
'A' வகை : ஆன்டிஜென் A
- RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி B - இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
'B' வகை : ஆன்டிஜென் B
- RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி A
- இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
'A B' வகை : ஆன்டிஜென் A மற்றும் B - RBC - யின் மேற்புறப்பரப்பில்
காணப்படும். அதற்கான ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்படாது.
'O' வகை : ஆன்டிஜென் A மற்றும் B
RBC - யின்
மேற்புறப்பரப்பில் காணப்படாது.
இருந்த போதிலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.
இரத்தம் செலுத்துவதற்கு முன்னர்
இரத்தம் வழங்குபவர் மற்றும் இரத்தம் பெறுபவருக்கு இடையில் ஆன்டிஜெனுக்கும்
ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ள வேண்டும்.
பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை
ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.
AB இரத்த வகை கொண்ட
நபரை அனைவரிடமிருந்து இரத்தம் பெறுவோர் வகை என அழைப்பர். இவர் அனைத்து இரத்த
வகையினையும் ஏற்றுக் கொள்வார்.
O இரத்த வகை கொண்ட
நபரை 'இரத்தக் கொடையாளி’ என
அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.
1940 ஆம் ஆண்டு
லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் வியன்னர் ஆகியொரால் ரீசஸ் இனக்குரங்கு இரத்தத்தில்
இருந்து Rh காரணியை கண்டறிந்தனர் Rh நேர்வகை
(Rh+) இரத்தத்தை உடையோர் அவர்களது இரத்த சிவப்பணுக்களின்
மீது Rh ஆன்டிஜென்களை கொண்டிருந்தனர் Rh எதிர்வகை (Rh-) இரத்தம் உடையோர் இதனை
பெற்றிருக்கவில்லை Rh ஆன்டிஜென்களுக்கு எதிராக உருவாகும்
ஆன்டிபாடிகாள் Rh ஆன்டிபாடிகாள் எனப்படும்.