நிணநீர்
மண்டலம்
நிணநீர் மண்டலமானது நிணநீர், நிணநீர்த்
தந்துகிகள், நிணநீர் நாளங்கள், நிணநீர்
முடிச்சுகள் மற்றும் நிணநீர்க் குழாய்களை உள்ளடக்கியது நிணநீர் மண்டலத்தின் வழியே
பாய்ந்தோடும் திரவம் நிணநீர் எனப்படும்.
நிணநீர்த்
தந்துகிகள்
ஒன்றாக இணைந்து பெரிய நிணநீர் நாளங்களை உருவாக்குகின்றன. சிறிய முட்டை
அல்லது பேரிக்காய் வடிவமுடைய நிணநீர் முடிச்சுகள் நிணநீர் நாளங்களின்
பாதையில் காணப்படுகின்றன.
நிணநீர்த் தந்துகிகளின் செல்
இடைவெளியில் நிணநீர் காணப்படுகிறது. இரத்தத் தந்துகிகளின் சுவர்களில் உள்ள
துளைகளின் வழியாக பிளாஸ்மா,
புரதங்கள் மற்றும் இரத்த செல்கள், திசுக்களின்
செல் இடைவெளிகளுக்குள் ஊடுருவும் போது நிறமற்ற நிணநீராக உருவாகிறது. இது இரத்த
பிளாஸ்மாவை ஒத்துள்ளது. ஆனால் நிறமற்றது மற்றும் குறைந்த அளவு புரதத்தைக்
கொண்டுள்ளது. இதில் மிகக் குறைந்த அளவே ஊட்டப்பொருட்கள், ஆக்ஸிஜன்,
CO2, நீர் மற்றும் WBC ஆகியவை உள்ளன.
· இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு
ஊட்டப்பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குகிறது.
· இது அதிப்படியான திசு திரவத்தையும், வளர்சிதை மாற்றப்
பொருட்களையும் திசுக்களின் இடைவெளிகளிலிருந்து புரதங்களையும் இரத்தத்திற்கு
மீண்டும் கொண்டு வருகிறது.
· இது சிறு குடலினால் உறிஞ்சப்பட்ட கொழுப்பினை
இரத்தத்திற்கு எடுத்துச் செல்கிறது. குடலுறிஞ்சிகளில் காணப்படக்கூடிய
நிணநீர்த்தந்துகிகள் செரிக்கப்பட்ட கொழுப்பினை உறிஞ்சுகின்றன.
· நிணநீரில் உள்ள லிம்ஃபோசைட்டுகள் உடலை
நோய்த்தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்றன.