விலங்குகளின் சுற்றோட்டம் - சுற்றோட்ட மண்டலத்தின் வகைகள் | 10th Science : Chapter 14 : Transportation in Plants and Circulation in Animals
சுற்றோட்ட
மண்டலத்தின் வகைகள்
விலங்குகள் இரண்டு வகையான
சுற்றோட்ட மண்டலத்தினைக் கொண்டுள்ளன. அவையாவன
1. திறந்த வகை
2. மூடிய வகை
திறந்த வகை இரத்த ஓட்டத்தில், இதயத்திலிருந்து
இரத்த நாளங்களில் உள்ள குழிகளுக்குள் இரத்தம் உந்தித் தள்ளப்படுகிறது. இக்குழி
இரத்த உடற்குழி எனப்படும். நுண்நாளங்கள் காணப்படுவதில்லை.
எ.கா. கணுக்காலிகள், மெல்லுடலிகள்,
அசிடியன்கள்.
இரத்த சுற்றோட்டம் நாளங்கள் மூலம்
உடல் முழுவதும் சுற்றி வருகிறது. தமனிகளிலிருந்து சிரைக்கு இரத்தம் தந்துகிகள்
வழியே பாய்கின்றது.
எ.கா. முதுகெலும்பிகள்
மேலும் தெரிந்துக் கொள்வோம்.
வில்லியம் ஹார்வி (1628)
நவீன
உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தினைக்
கண்டறிந்தார்.