Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 14 : Transportation in Plants and Circulation in Animals

   Posted On :  29.07.2022 06:16 pm

10வது அறிவியல் : அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. IV. பொருத்துக: V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி: VI. குறு வினாக்கள்: VII. கீழ்க்கண்ட கூற்றுக்கான காரணங்களைத் தருக. VIII. நெடு வினாக்கள் : IX. கூற்று மற்றும் காரணம் கூறுதல்: X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS)

தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்)______________.

அ) மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.

ஆ) ஆற்றல் செலவிடப்படுகிறது.

இ) அவை மேல் நோக்கி கடத்துதல் முறையாகும்.

ஈ) இவை அனைத்தும்.

 

2. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ______________.

அ) புறணி

ஆ) புறத்தோல்

இ) புளோயம்

ஈ) சைலம்

 

3. நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது.

அ) கார்பன்டை ஆக்ஸைடு

ஆ) ஆக்ஸிஜன்

இ) நீர்

ஈ) இவை எதுவுமில்லை

 

4. வேர்த் தூவிகளானது ஒரு

அ) புறணி செல்லாகும்

ஆ) புறத்தோலின் நீட்சியாகும்

இ) ஒரு செல் அமைப்பாகும்

ஈ) ஆ மற்றும் இ

 

5. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை?

அ) செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)

ஆ) பரவல்

இ) சவ்வூடு பரவல்

ஈ) இவை அனைத்தும்

 

6. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

அ) எண்டோகார்டியம்

ஆ) எபிகார்டியம்

இ) மையோகார்டியம்

ஈ) மேற்கூறியவை அனைத்தும்

 

7. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

அ) வெண்ட்ரிக்கிள் - ஏட்ரியம் - சிரை - தமனி

ஆ) ஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - சிரை - தமனி

இ) ஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - தமனி - சிரை

ஈ) வெண்ட்ரிக்கிள் - சிரை - ஏட்ரியம் - தமனி

 

8. விபத்து காரணமாக 'O' இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?

அ) 'O' வகை

ஆ) 'AB' வகை

இ) A அல்லது B வகை

ஈ) அனைத்து வகை

 

9. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ----------------------.

அ) SA கணு

ஆ) AV கணு

இ) பர்கின்ஜி இழைகள்

ஈ) ஹிஸ் கற்றைகள்

 

10. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்

ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC

ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி நீராவி போக்கு எனப்படும்.

2. நீரானது வேர் செல்லின் சிம்பிளாஸ்ட் பிளாஸ்மா சவ்வின் வழியாக செல்கிறது.

3. வேரின் தூவி அமைப்பானது நீரை உறிஞ்ச உதவுகிறது.

4. இயல்பான இரத்த அழுத்தம் 120 mm/80 mm Hg.

5. சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு 72 – 75 முறைகள் ஆகும்.

 

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

 

1. உணவுக் கடத்துதலுக்கு காரணமான திசு புளோயமாகும்.

விடை: சரி

2. தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை இழக்கின்றன.

விடை: சரி

3. புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை - குளுக்கோஸ்.

விடை: தவறு

புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை - சுக்ரோஸ்.

4. அப்போபிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.

விடை: தவறு

சிம்பிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.

5. காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை திறந்து கொள்ளும்.

விடை: தவறு

காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை மூடிக் கொள்ளும்.

6. இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது நரம்புகளின் மூலமாக நடைபெறும்.

விடை: தவறு

இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது SA கணு மூலமாக நடைபெறும்.

7. அனைத்து சிரைகளும் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தை கடத்துபவையாகும்.

விடை: தவறு

நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.

8. WBC பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

விடை: சரி

9. வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் லப் எனும் ஒலி தோன்றுகிறது.

விடை: சரி

 

IV. பொருத்துக:

பிரிவு I

1. சிம்பிளாஸ்ட் வழி - இலை

2. நீராவிப்போக்கு - பிளாஸ்மோடெஸ்மேட்டா

3. ஆஸ்மாஸிஸ் - சைலத்திலுள்ள அழுத்தம்

4. வேர் அழுத்தம் - சரிவு அழுத்த வாட்டம்

விடை :

1. சிம்பிளாஸ்ட் வழி - பிளாஸ்மோடெஸ்மேட்டா

2. நீராவிப்போக்கு - இலை

3. ஆஸ்மாஸிஸ் - சரிவு அழுத்த வாட்டம்

4. வேர் அழுத்தம் - சைலத்திலுள்ள அழுத்தம்

 

பிரிவு II

1. லியூக்கேமியா - திராம்போசைட்

2. இரத்த தட்டுகள் - ஃபேகோசைட்

3. மோனோசைட்டுகள் - லியூக்கோசைட் குறைதல்

4. லுயூக்கோபினியா - இரத்தப்புற்று நோய்

5. AB இரத்த வகை - ஒவ்வாமை நிலை

6. O இரத்த வகை - வீக்கம்

7. ஈசினோ ஃபில்கள் - ஆன்டிஜனற்ற இரத்த வகை

8. நியூட்ரோ ஃபில்கள் - ஆன்டிபாடி அற்ற இரத்த வகை

விடை :

1. லியூக்கேமியா - இரத்தப்புற்று நோய்

2. இரத்த தட்டுகள் - திராம்போசைட்

3. மோனோசைட்டுகள் - ஃபேகோசைட்

4. லுயூக்கோபினியா - லியூக்கோசைட் குறைதல்

5. AB இரத்த வகை - ஆன்டிபாடி அற்ற இரத்த வகை

6. O இரத்த வகை - ஆன்டிஜனற்ற இரத்த வகை

7. ஈசினோ ஃபில்கள் - ஒவ்வாமை நிலை

8. நியூட்ரோ ஃபில்கள் - வீக்கம்

 

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி:

 

1. மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.

பெரிகார்டியம்.

2. மனித இரத்தத்தில் உள்ள RBC-யின் வடிவம் என்ன?

இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்.

3. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்.

4. எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?

பிளாஸ்மா, புரதம், இரத்த செல்கள்.

5. வெண்ட்ரிக்கிளிலிருந்து வெளிச் செல்லும் முக்கியத் தமனிகளில் காணப்படும் வால்வு எது?

செமிலுனார் வால்வு (semilunar valve)

6. இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது? கரோனரி தமனி.

 

VI. குறு வினாக்கள்:

 

1. நீராவிப் போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக்கொள்வதற்குமான காரணத்தைக் கூறுக.

காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறந்து கொள்கின்றன. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக்கொள்கிறது.

 

2. கூட்டிணைவு என்றால் என்ன?

கூட்டிணைவு: நீர் மூலக்கூறுக்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்

 

3. வேரினுள் நீர் நுழைந்து, இலையின் மூலம் நீராவியாக வளிமண்டலத்தில் இழக்கப்படும் பாதையைக் காட்டுக.

வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கிய கடத்துதல் மூலம் தாவரங்களின் பிறபகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின்வரும் படி நிலைகளில் நடைபெறுகிறது.

1. வேர் அழுத்தம்.

2. நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக் குழாய் விசை)

3. நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு

4. நீராவிப் போக்கின் இழுவிசை.


 

4. ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் என்ன நிகழும்?

ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவை விட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் தாவரங்கள் உலர்ந்து போகும். மேலும் வளர்ச்சி தடைப்படும்.

 

5. மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விவரி.


அமைப்பு

• இதயம் இரண்டு அடுக்கினால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது.

மனித இதயம் நான்கு அறைகளை கொண்டது.

• மெல்லிய தசைகளால் ஆன மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் (ஒருமை - ஏட்ரியம்) என்றும் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும். இவ்வறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் செப்டம்' எனப்படும்.

• இதயத்தின் கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் எனப்படும். வலது மற்றும் இடது வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.

• வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து உருவான நுரையீரல் பொதுத்தமனி, வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகளாகப் பிரிவடைகிறது.

• இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது. கரோனரி தமனி இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

• இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.

i) வலது ஏட்ரியோவெண்ட்ரிக்குலார் வால்வு:

இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது.

ii) இடது ஏட்ரியோவெண்ட்ரிக்குலார் வால்வு:

இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது இரண்டு கதுப்பு போல அமைந்துள்ளதால். ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படுகிறது.

iii) அரைச்சந்திர வால்வுகள்:

இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத் தமனிகளில் (பெருத்தமனி, நுரையீரல், தமனி) உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள் இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன.

செயல்படும் விதம்

இதயம் உடலின் பல பகுதிகளிலிருந்து சிரைகளின் மூலம் இரத்தத்தை பெறும். குறிப்பாக மேல், கீழ் பெருஞ்சிரைகள் மற்றும் நுரையீரல் சிரைகள் இதயத்தை நோக்கி இரத்தத்தை செலுத்துகின்றன. இவ்விதம் இதயத்தின் வலது, ஏட்ரிய அறை ஆக்ஸிஜன் நீக்கப்பட்ட இரத்தத்தையும் இடது ஏட்ரிய அறை நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜன் பெற்ற இரத்தத்தையும் பெறும். இரு ஏட்ரிய அறைகளும் சுருங்கும் வேளையில் முறையே இரத்தம் வலது, இடது வெண்ட்ரிக்கிள்களை அடையும். வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் முக்கிய தமனி இரத்தத்தை ஆக்ஸிஜன் பெறுவதற்கென நுரையீரல்களுக்கு எடுத்து செல்லும். இடது வெண்ட்ரிக்கிலிலிருந்து ஓர் பெருந்தமனி தோன்றியுள்ளது. இத்தமனியிலிருந்து கோரோனரி தமனிகளும் உடல் சுற்றுக்கான தமனிகளும் தோன்றியுள்ளன.

 

6. மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படுவதேன்?

ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இரு முறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும்.

 

7. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?

* இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது.

* முதல் ஒலியான 'லப்' நீண்ட நேரத்திற்கு ஒலிக்கும். வெண்ட்ரிக்குலார்கள் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது. இரண்டாவது ஒலியான 'டப்' சற்று குறுகிய காலமே ஒலிக்கும். இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.

 

8. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?

இதய வால்வுகள் தசையால் ஆன சிறு மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும் உதவுகிறது.

 

9. Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

• Rh காரணியை கண்டறிந்தவர் லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர். இது ரீசஸ் இனக் குரங்கின் இரத்தத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 

10, தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?

தமனி : தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை.

சிரை : சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை.

 

11. சைனோ ஆரிக்குலார் கணு 'பேஸ் மேக்கர்' என்று ஏன் அழைக்கப்படுகிறது?

SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது. ஏனெனில் இது இதயத்துடிப்புகளான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.

 

12. உடல் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த ஓட்டத்தினை வேறுபடுத்துக.

இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து துவங்கி ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் பல உறுப்புகளுக்கு எடுத்து சென்று மீண்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை வலது ஏட்ரியத்திற்கு கொண்டு வரும் சுற்றோட்டத்தினை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம் என்கிறோம்.

வலது வெண்டிரிக்கிளிலிருந்து இரத்தம் நுரையீரல் தமனியின் மூலம் நுரையீரலை அடையும். நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் பெற்ற இரத்தம் நுரையீரல் சிரைகளின் மூலம் மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியத்தை வந்தடையும். இவ்விதம் வலது வெண்டிரிக்கிளிலிருந்து நுரையீரல் வழியாக இரத்தம் மீண்டும் இடது வெண்டிரிக்கிளைச் சென்றடைவதே நுரையீரல் இரத்த ஓட்டம் எனப்படுகிறது.

 

13. இதய சுழற்சியின் நிகழ்வானது 0.8 வினாடிகளில் நிறைவடைகிறது எனில், ஒவ்வொரு நிகழ்வின் கால அளவையும் குறிப்பிடுக.

* ஏட்ரியல் சிஸ்டோல் - ஆர்க்கிள்கள் சுருக்கம் 0.1 வினாடி

* வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் - வெண்ட்ரிக்கிள்கள் சுருக்கம் 0.3 வினாடி

* வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல் - வெண்ட்ரிக்கிள் விரிவடைதல் 0.4 வினாடி

 

VII. கீழ்க்கண்ட கூற்றுக்கான காரணங்களைத் தருக.

 

1. தாவர வேர்கள் கனிமங்களை ஆற்றல் சாரா நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் கொள்வதில்லை.

காரணங்கள்

கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளதால் அவை சவ்வின் வழியாக எளிதில் புக முடியாது.

மண்ணிலுள்ள கனிமங்களின் செறிவு வேர்களின் செல்களில் உள்ள செறிவினை விடக் குறைவாக உள்ளது. ஆகவே பெரும்பாலான கனிமங்கள் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாக வேரின் புறத்தோல் சைட்டோபிளாசம் வழியாக உள் நுழைகிறது. இதற்கு தேவையான ஆற்றலை ATP-யின் மூலம் பெறுகிறது. பின்பு, நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக அனைத்து பாகங்களுக்கும் கடத்தப்படுகிறது.

 

2. இலைத்துளைகள் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணமான அமைப்பு காப்பு செல்கள் ஆகும்.

காரணங்கள்

ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டு காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளையானது. (stomata) பகலில் திறந்தும், இரவில் மூடியும் காணப்படும். இலைத்துளையின் செயல்பாடானது காப்புச் செல்களின் விறைப்பழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது. பகலில் காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புதன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறந்து கொள்கின்றன. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக் கொள்கிறது.

 

3. புளோயத்தின் வழியாக உணவுப் பொருளானது அனைத்து பகுதிகளுக்கும் பல திசைகளில் கடத்தப்படுகிறது.

காரணங்கள்

புளோயம் உணவினை (சுக்ரோஸ்) தோற்றுவாயிலிருந்து தேக்கிடத்திற்கு கடத்துகிறது. உணவு உற்பத்தியாகும் இடமான இலைகள் தோற்றுவாயாகவும் (source) சேமிக்கும் அல்லது தேவையான இடம் தேக்கிடமாகவும் (sink) கருதப்படுகிறது. ஆனால் தோற்றுவாயும், தேக்கிடமும் தேவையைப் பொறுத்தும், பருவகாலத்தைப் பொறுத்தும் மாறுபடலாம்.

தோற்றுவாய்க்கும் தேக்கிடத்திற்கும் உள்ள தொடர்பு அவ்வப்போது மாறுபாடு அடையக்கூடியது. உணவு இடம் பெயர்வது மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ (இரு திசைகளில்) நடைபெறுகிறது.

 

4. இலைகள் உதிரும்போது தாவரங்களில் கனிமங்கள் இழக்கப்படுவதில்லை.

காரணங்கள்

சில தாவரங்களில் மூப்படைந்த உதிரும் நிலையிலுள்ள இலைகளில் உள்ள தனிமங்கள் இளம் இலைகளுக்கு இடம் பெயர்கின்றன. இந்நிகழ்ச்சி இலையுதிர் தாவரங்களில் நடைபெறுகிறது. பாஸ்பரஸ், சல்பர், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மிக விரைவாக இடம் பெயரும் தனிமங்களாகும். கால்சியம் எளிதில் இடம் பெயர்வதில்லை. சிறிதளவு தனிமங்கள் சைலம் மற்றும் புளோயத்தினிடையே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

 

5. வலது ஆரிக்கிள் சுவரை விட வலது வெண்ட்ரிக்கிள் சுவர் தடிமனாக உள்ளது.

காரணங்கள்

இதயத்திலிருந்து இரத்தம் அதிக அழுத்தத்துடன் இந்த அறைகளில் நிரம்புவதால் சுவர் கடினமாக உள்ளது.

 

6. பாலூட்டிகளின் முதிர்ந்த RBC யில் செல் நுண்ணுறுப்புகள் காணப்படுவதில்லை.

காரணங்கள்

பாலுட்டிகளின் RBC யில் உட்கரு இல்லாதிருப்பதினால் அச்செல்லானது இருபுறமும் குழிந்த அமைப்பபைப் பெற்று, அதிகளவு ஆக்ஸிஜன் இணைவதற்கான மேற்பரப்பினைப் பெற்றுள்ளது. RBC - ல் மைட்டோகாண்ட்ரியா இல்லாதிருப்பதால் அதிக அளவு ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கடத்துவதை அனுமதிக்கிறது. எண்டோபிளாச வலைப்பின்னல் இல்லாதிருப்பதனால் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று RBC எளிதாக ஊடுருவுகிறது.

 

VIII. நெடு வினாக்கள் :

 

1. தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன? விவரி.

விடை:



மண்ணிலிருந்து வேர்த் தூவியின் வழியாக சைலத்திற்கு நீர் செல்லும் பாதை

நீரானது வேர்த்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது. ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.

 

 

2. நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப் போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக.

தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப் போக்கு எனப்படும்.

நீராவிப்போக்கின் முக்கியத்துவம்

* நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.

* ஒளிச்சேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.

* கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகிறது.

* இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்க நீராவிப்போக்கு உதவுகிறது.

* செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.

 

 

3. லியூக்கோசைட்டுகள் துகள்கள் உடையவை மற்றும் துகள்களற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏன்? அவற்றின் பெயர்களையும், பணிகளையும் குறிப்பிடுக.

விடை:

இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இவை மூன்று வகைப்படும்.

1. துகள்களுடைய செல்கள்.

2. துகள்களற்ற செல்கள்.

இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உட்கருக்கள் ஒழுங்கற்றவை அல்லது கதுப்புக்களுடையவை.

இவை மூன்று வகைப்படும்.

1. நியூட்ரோஃபில்கள்.

2. ஈசினோஃபில்கள்.

3. நியூட்ரோஃபில்கள்.

 

4. சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.

விடை:

சிஸ்டோல்

வென்ட்ரிகுலார் சிஸ்டோல் நிகழ்வின் போது இடது வெண்ட்ரிக்கிள் சுருங்குவதால் இரத்தம் பெருந்தமனிக்குள் வேகமாக செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வின்போது ஏற்படும் மிகை அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் எனப்படும்.

டையஸ்டோல்

இடது வென்ட்ரிக்கிள் விரிவடைவதன் காரணமாக அழுத்தம் குறைகிறது. இக்குறை அழுத்தமே டையஸ்டோலிக் அழுத்தம் எனப்படும்.


இதய துடிப்பின் பரவுதல்:

சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.

 

5. இரத்தத்தின் பணிகளை பட்டியலிடுக

விடை:

இரத்தத்தின் பணிகள்

* சுவாச வாயுக்களைக் கடத்துகிறது. (ஆக்ஸிஜன் மற்றும் CO2)

* செரிமானம் அடைந்த உணவுப்பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.

* ஹார்மோன்களைக் கடத்துகிறது

* நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.

* நோய் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

* உடலின் வெப்பநிலை மற்றும் pHஐ ஒழுங்குப்படுத்தும் தாங்கும் ஊடகமாக செயல்படுகிறது.

* உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.

 

IX. கூற்று மற்றும் காரணம் கூறுதல்:

 

வழிமுறைகள்: கீழ்க்கண்ட கேள்வியில் கூற்று (A) மற்றும் அதற்குரிய காரணம் (R) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான பதிலை குறிப்பிடுக.

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

இ) (A) சரியாக இருந்து காரணம் (R) மட்டும் தவறு.

ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

 

1. கூற்று (A) : சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC முக்கியப் பங்கு வகிக்கின்றது.

காரணம் (R) : RBC-ல் செல் நுண்ணுறுப்புகளும் உட்கருவும் காணப்படுவதில்லை.

விடை : அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

 

2. கூற்று (A) : 'AB' இரத்த வகை உடையோர் அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அனைத்து வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம்.

காரணம் (R) : AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை.

விடை : ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

 

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS)

 

1. உலர்ந்த தாவரப்பொருளை நீரில் வைக்கும் போது உப்பிவிடும். இதற்கான நிகழ்ச்சி என்ன? வரையறை செய்க.

உயிரற்ற தாவரப் பொருட்கள் நீரில் வைக்கப்படும்போது நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்ச்சி உள்ளீர்த்தல் எனப்படும். எடுத்துக்காட்டாக உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சை நீரை உறிஞ்சி உப்பிவிடும். ஆனால் நீரில் கரையாது.

 

2. இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற அறைகளின் சுவர்களைவிட தடிமனாக இருப்பது ஏன்?

இதயத்திலிருந்து அதிக அழுத்தத்தில் இரத்தமானது வெண்ட்ரிக்கிள் செலுத்தப்படுவதால்.

 

3. இதய ஒலியைக் கண்டறிய மருத்துவர்கள் ஸ்டேதாஸ்கோப்பை பயன்படுத்துவது ஏன்?

மனித உடலின் உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய ஸ்டெத்தஸ்கோப் பயன்படுகிறது. ஸ்டெத்தஸ்கோப்பினை மார்புப் பகுதியில் வைத்து இதயத்தின் ஒலியைக் கேட்டறியலாம். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

 

4. நுரையீரல் தமனி மற்றும் நுரையீரல் சிரை ஆகியவை சாதாரண தமனி மற்றும் சிரை ஆகியவற்றின் பணிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு வேறுபடுகின்றன?

நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.

 

5. நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.

நீராவிப்போக்கின் மூலம் நீர் மற்றும் தனிமங்கள் வேரிலிருக்கும் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன. ஆனால் அதிகபடியான நீராவிபோக்கு தாவரங்களை உலர செய்வதுடன், இலைகள் வாடிப்போவதுடன் நீரும் வெளியேறுவதால் நீராவிப் போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்.



Tags : Transportation in Plants and Circulation in Animals | Science தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் | அறிவியல்.
10th Science : Chapter 14 : Transportation in Plants and Circulation in Animals : Book Back Questions with Answers Transportation in Plants and Circulation in Animals | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் : புத்தக வினாக்கள் விடைகள் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்