Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | புத்தக பயிற்சிக் கணக்குகள்

வேலை, ஆற்றல் மற்றும் திறன் | இயற்பியல் - புத்தக பயிற்சிக் கணக்குகள் | 11th Physics : UNIT 4 : Work, Energy and Power

11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்

புத்தக பயிற்சிக் கணக்குகள்

இயற்பியல் : வேலை, ஆற்றல் மற்றும் திறன் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் புத்தக பயிற்சிக் கணக்குகள்

வேலை, ஆற்றல் மற்றும் திறன் (இயற்பியல்)

பயிற்சிக் கணக்குகள்


1. 2Kg பளுவை 10m உயரத்திற்கு தூக்கும் 30N விசையினால் செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடுக. (g = 10ms-2)

கொடுக்கப்பட்டவை : 

நிறை = 2Kg, உயரம் = 10 m, விசை = 30N, 

தீர்வு: 

விசையினால் செய்யப்பட்ட வேலை W = F.S 

= 30 × 10 

W = 300J

விடை: 300J

 

2. ஒரு உராய்வற்ற கிடைத்தளத்தில் 5m.s-1 திசைவேகத்தைக் கொண்ட பந்து ஒன்று செங்குத்துடன் 60° கோணத்தில் மோதுகிறது. மீட்சியளிப்பு குணகம் 0.5 எனில் மோதலுக்குப் பிறகு பந்தின் திசைவேகம் மற்றும் திசையைக் காண்க. 

கொடுக்கப்பட்டவை u = 5ms-1, e = 0.5, θ = 60° 

தீர்வு: 

மேற்பரப்பிற்கு இணையாக உள்ள திசைவேக கூறு மாறும் பொழுது 

v cos α = u cos θ


v cos α = 5 × cos 60 

vcos α = 5 × 1/2 = 5/2 ..... (1) 

மீட்சியளிப்பு குணக விதியின் படி 

v sin α. = eusin θ 

v sin α = 0.5 × 5 × sin 60°


v = 3.3 ms-1

விடை: v = 0.3 m s-1


3. படத்தில் காட்டியுள்ளவாறு m நிறையுள்ள ஒரு குண்டு r நீளமுள்ள புறக்கணிக்கத் தக்க நிறை கொண்ட கம்பியில் இணைக்கப்பட்டு மறுமுனை O என்ற நிலையான மையத்தில் தடையின்றி சுழலுமாறு பொருத்தப் பட்டுள்ளது. வட்டத்தின் மேற்புள்ளியை அடைய பொருளுக்கு அளிக்க வேண்டிய வேகம் என்ன? (குறிப்பு: ஆற்றல் மாறா விதியைப் பயன்படுத்துக?) இந்த வேகம் பாடப்பகுதி 4.2.9 இல் பெறப்பட்ட வேகத்தைவிட குறைவானதா(அல்லது) அதிகமானதா?



தீர்வு : 

AB = OB - OA = r - rcos θ 

= r(1 - cos θ)

வட்டத்தின் மேற்புள்ளியை அடைவதற்கான அதிகரிக்கும் நிலையாற்றல் P.E = mgr(1 - cos θ) அதே அளவு குறையும் இயக்க ஆற்றல்


4. A மற்றும் B என்ற இரு நிறை தெரியாத வெவ்வேறு பொருள்கள் மோதிக் கொள்கின்றன. தொடக்கத்தில் பொருள் A ஒய்வு நிலையிலும் B ஆனது v வேகத்தையும் கொண்டுள்ளது. மோதலுக்குப் பின் பொருள் B ஆனது v/2 என்ற வேகத்தைப் பெற்று அதன் ஆரம்ப இயக்க திசைக்கு செங்குத்தாகச் செல்கிறது. மோதலுக்குப் பின் பொருள் A செல்லும் திசையைக் காண்க. 

தீர்வு :


விடை: θ = 26° 33


5. 20g நிறை கொண்ட ஒரு துப்பாக்கி குண்டு 5kg நிறையுள்ள ஊசல் குண்டில் மோதுகிறது. ஊசலின் நிறையின் மையம் 10cm செங்குத்துத் தொலைவு உயருகிறது. துப்பாக்கி குண்டு ஊசலில் பொதிந்து விட்டால் அதன் தொடக்க வேகத்தைக் கணக்கிடுக. 

கொடுக்கப்பட்டவை : 

துப்பாக்கி குண்டின்

நிறை m1 = 20g = 20 × 10-3 kg 

ஊசல் குண்டின் நிறை m2 = 5kg 

செங்குத்து தொலைவு h = 10 cm = 10 × 10-2

தீர்வு :

துப்பாக்கி குண்டின் தொடக்க திசைவேகம் u1

ஓய்வு நிலையுள்ள ஊசல் குண்டின்

திசைவேகம் u2 = 0 

துப்பாக்கி குண்டு பொருளினுள் பொதிந்த பிறகு துப்பாக்கி குண்டு மற்றும் பொருள் ஆகியவற்றின்


துப்பாக்கி குண்டின் தொடக்க திசைவேகம்

u1 = 351.4 ms-1

விடை: v = 351.4m s-1


Tags : Work, Energy and Power | Physics வேலை, ஆற்றல் மற்றும் திறன் | இயற்பியல்.
11th Physics : UNIT 4 : Work, Energy and Power : Book Back Numerical Problems Work, Energy and Power | Physics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன் : புத்தக பயிற்சிக் கணக்குகள் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்