உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade
V. விரிவான விடை தருக.
1. பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
MNC யின் நன்மைகள்:
• பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை தரமாக உற்பத்தி
செய்கிறது.
• உலகளவில் நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
• பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்தி கொள்ள முடியும்.
• வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள்:
• பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
• சுற்றுசூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
• பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு
வழிவகுக்கும்.
• பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்கநெறிமுறைகளை மீறுவர்.
2. 'உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
உலக வர்த்தக அமைப்பு:
• 1994ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் உலக வர்த்தக அமைப்பை அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் இறுதி
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
• இந்த அமைப்பை அமல்படுத்திட உடன்படிக்கையை ஏற்று 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:
• அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
• வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
• முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
• முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்
• வர்த்தக தாராளமயமாக்கலுடனான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான
ஒரு மன்றத்தை வழங்குதல்
• நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுசூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து
அறிமுகம் செய்தல்,
3. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
• உலகமயமாக்கலின் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
• உலகில் உலகமயமாக்கல் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
• தொழில்துறை உலகில், ஊதியங்கள்,
தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு
கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
• இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
• உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற
நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
• மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது
வழிவகுக்கிறது.
• உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
VII. செயல்திட்டம் மற்றும்
செயல்பாடு.
1. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உலகமயமாக்கல் பற்றி
விவாதித்தல்.
மாணவர் செயல்பாடு.
2. உலகமயமாக்கல் பற்றிய படங்களை மாணவர்கள் சேகரித்து
படத் தொகுப்பினை உருவாக்குதல்.
(தென்னிந்திய வர்த்தகம், வர்த்தகர்கள்
படங்கள், பட்டு வழி வரைபடம், நறுமணப்பொருட்கள் வழி வரைபடம் மற்றும் கலிங்க வர்த்தக வரைபடம் முதலியன) வரைபடத்தில் உள்ளது.
3. மாணவர்கள் இந்தியாவிலுள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில்
படங்கள் மற்றும் விவரங்களை சேகரித்தல்
மாணவர் செயல்பாடு.