உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
பாடச்சுருக்கம்
• உலகமயமாக்கல் என்பது ஒரு
நாட்டை உலக பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதாகும்.
• உலகமயமாக்களின் மூன்று
நிலைகள் :
தொன்மையான உலகமயமாக்கல், இடைப்பட்ட
உலகமயமாக்கல், நவீன உலகமயமாக்கல்
• LPG-தாராளமயமாக்கல் (Liberalization), தனியார்மயமாக்கல் (Privatization)மற்றும்
உலகமயமாக்கல் (Globalization).
• பன்னாட்டு நிறுவனமானது
அதன் சொந்த நாட்டிற்கும் வெளியே குறைந்தபட்சம் வேறு ஒரு நாட்டில் பண்டங்களையும்
அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு
பெருநிறுவனமாகும்.
• பன்னாட்டு நிறுவனங்களை
சர்வதேச நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு அமைப்பு என்றும் அழைக்கலாம்.
• 1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காட்டின் (GATT) நிறுவன
உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
கலைச்சொற்கள்
உலகமயமாக்கல் : globalization பண்டங்கள்
மற்றும் பணிகள் சர்வதேச சந்தையில் எந்த தடையும் ஏற்படாமல் பல்வேறு பொருளாதாரங்களை
ஒருங்கிணைப்பதாகும்.
தொன்மையான : archaic கலை
அல்லது கலாச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக கிமு(பொ.ஆ.மு) 7ஆம் - 6ஆம்
நூற்றாண்டுகள்
பரிணாம வளர்ச்சி : evolution
ஏதாவது ஒரு படிப்படியான வளர்ச்சி
அடமானம் வைக்கப்பட்ட
: mortgaged எதிர்கால
ஆபத்து அல்லது உடனடி பயன்பாட்டு தடைகளை அம்பலப்படுத்துகிறது.
உடனடியாக (திடீர்) :
spurt உடனடியாக
வெளியேறுதல் வேண்டும்
சீரழிவான : detrimental தீங்கு
விளைவிக்கக்கூடிய
வெற்றிகரமான : thriving வளமான
மற்றும் வளர்ந்து வரும், மலர்ச்சியடையும்