Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பன்னாட்டு நிறுவனம் (MNC) Multi National Corporation

பரிமாண வளர்ச்சி, காரணங்கள், நன்மைகள், தீமைகள், - பன்னாட்டு நிறுவனம் (MNC) Multi National Corporation | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade

   Posted On :  27.07.2022 02:35 pm

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

பன்னாட்டு நிறுவனம் (MNC) Multi National Corporation

பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

பன்னாட்டு நிறுவனம் (MNC) Multi National Corporation 

பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

 

MNC யின் பரிமாண வளர்ச்சி

கிழக்கிந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது. அதன் பிறகு அரசியல் ரீதியாக நாடெங்கிலும் பரவலாக ஆதிக்கம் செலுத்தியது. 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருள்களை கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன. 1950களுக்கு பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறையிலும் ஈடுபட்டது. தற்போது, இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது. இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும். இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.

 

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி

இந்திய தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனம் ஒரு பொதுவான வடிவத்துடன், இந்திய தொழிலதிபர்களின் ஒத்துழைப்புடன் நுழைந்தது. 1980களில் தாராளமயமாக்களின் போக்குகள் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கு கணிசமான பங்கினை அளித்தன. 1948 - 1988ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கையெழுத்தான 12,760 மொத்த வெளிநாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இருந்து இது தெளிவாகிறது. 1991இல் அறிவிக்கப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையினால் (FIP) வெளிநாட்டு ஒத்துழைப்புகள் அதிகரித்து வெளிநாட்டு நேரடி முதலீடும் (FDI) அதிகரித்துள்ளது.


மென்பொருள் பன்னாட்டு நிறுவனம்

 

MNC யின் வளர்ச்சிக்கான காரணங்கள்:

1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்

பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.

2. சந்தைப்படுத்தும் மேன்மை

ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது. மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.

3. நிதி மேன்மை

இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன. இதனால், வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.


4. தொழில்நுட்ப மேன்மை

பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.


5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள்

பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

 

MNC யின் நன்மைகள்

1. பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.

2. பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.

3. பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

4. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கின்றன.

 

பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள்

1. பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

2. பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுசூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.

3. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

4. பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.


Tags : Evolution, Growth in India, Reasons, Advantages, Disadvantages of MNC பரிமாண வளர்ச்சி, காரணங்கள், நன்மைகள், தீமைகள்,.
10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade : Multi National Corporation (MNC) Evolution, Growth in India, Reasons, Advantages, Disadvantages of MNC in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் : பன்னாட்டு நிறுவனம் (MNC) Multi National Corporation - பரிமாண வளர்ச்சி, காரணங்கள், நன்மைகள், தீமைகள், : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்