வரலாற்றுப் பார்வையில் தென் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வணிகர்கள்
வர்த்தக நடவடிக்கைகளை
ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் தென்னிந்திய வர்த்தகக்
குழுக்களை உருவாக்கினர்கள். இந்திய கலாச்சாரத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்படும் வழிகளாக வர்த்தகக் குழுக்கள் இருந்தன.
கி.பி. (பொ.ஆ.) 1053இல்
கலிங்க வர்த்த கர்கள் (ஒடிசா) சிவப்பு வண்ணகல் அலங்கார பொருள்களை வர்த்தகத்திற்கு
கொண்டு வந்தனர். மேலும், ஆரம்ப நாட்களில் பருத்தி ஆடைகளை தென்கிழக்கு ஆசியாவிற்கு
கொண்டு வந்து வர்த்தகம் செய்தனர்.
ஐரோப்பிய
வணிகர்கள்
இந்த காலத்தில்
இந்தியாவிற்கு பல்வேறு ஐரோப்பிய நிறுவனங்கள் வருவதற்கு வர்த்தக நடவடிக்கைகள்
காரணமாக இருந்தது. வாஸ்கோ-டா-காமாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு
நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதைகண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரிக
உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது...
வாஸ்கோ-டா-காமாவின்
தலைமையின் கீழ் போர்ச்சுகீசியர்கள் மே 1498இல் கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தனர்.
வாஸ்கோ-டா-காமாவால் போர்ச்சுக்கல்லுக்கு கொண்டு வந்த பொருள்களின் லாபமானது, இந்தியா
முழுவதும் பயணம் செய்த செலவைவிட 60 மடங்காகும். மேலும் 1502இல், வாஸ்கோ-டா-
காமாவின் இரண்டாவது பயணம் இந்தியாவில் கள்ளிக்கோட்டை, கொச்சின்
மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகுத்தது.
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக கொச்சின் இருந்தது.
1596இல் இருந்து டச்சுக்காரர்கள் பல பயணங்கள் மேற்கொண்டு, டச்சு
கிழக்கு இந்திய நிறுவனத்தை 1602இல் உருவாக்கினர். அட்மிரல் வான் டெர் ஹகேன் என்பவரால்
டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம், பெத்த போலி (நிஜாம்பட்டினம்) தேவனாம்பட்டினம் ஆகிய
இடங்களில் நிறுவப்பட்டது. 1610ஆம் ஆண்டில் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி
பழவேற்காடு என்னுமிடத்தில் மற்றொரு தொழிற்சாலையை நிறுவினர். இண்டிகோ மற்றும் வங்க
கச்சா பட்டு போன்ற இதர பொருள்கள் டச்சுக்காரர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக பழவேற்காடு இருந்தது.
டிசம்பர் 31, 1600 அன்று, கிழக்கிந்திய
கம்பெனி நிறுவனம் துவங்குவதற்கு எலிசபெத் ராணியால் பட்டயம் வழங்கப்பட்டது. தென்
கிழக்கு கடற்கரையில், ஆங்கிலேயர்கள் 1611இல்
மசூலிப்பட்டினத்திலும், 1626இல் பழவேற்காடு அருகிலும் நிறுவினார்கள். கோல்கொண்டாவின்
சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு "கோல்டன் ஃபயர்மேன்" என்ற
பட்டத்தை வழங்கி, 1632ல் அவர்களை தங்கள் “ராஜ்ய
துறைமுகங்களில்” இலவசமாக வர்த்தகம் செய்யவும் அனுமதி வழங்கினார். 1639ஆம்
ஆண்டில் ஆங்கிலேயர்களால் சென்னையில் ஒரு வலுவான நிறுவனம் கட்டப்பட்டது. பின்பு அது
செயின்ட் ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்பட்டது. சோழமண்டல கடற்கரையிலுள்ள
மசூலிப்பட்டினம் விரைவில் ஆங்கில குடியேற்றத்தின் தலைமையகமாக மாறியது.
டேனிஷ்காரர்கள், 1616ஆம்
ஆண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்து டேனிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் ஒன்றை
உருவாக்கினர். 1620ஆம் ஆண்டில் இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால்
டிராங்குபார் (தரங்கம்பாடி, தமிழ்நாடு) தலைமையிடமாக நிறுவப்பட்டது.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள்
1668ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின் சுல்தானிடம் அனுமதி பெற்று, முதல்
பிரெஞ்சு தொழிற்சாலையை நிறுவினர். 1693ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றி
மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடமே ஒப்படைத்தனர். 1701இல்
பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக மாறியது.