பொருளியல் - நியாயமான நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade
நியாயமான நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO)
நியாயமான வர்த்தகமானது, சிறிய
விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு
நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின்
மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும். அவைகள்,
• சிறிய
அளவிலான விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வருமானத்தை
உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துவது.
• பொருள்கள்
உற்பத்தி மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பொருளாதார இலாபங்கள், வாய்ப்புகள்
மற்றும் இடர்பாடுகளை சமமாக்குதல்.
• உற்பத்தியாளர்
குழுக்களின் நிறுவன மற்றும் வர்த்தக திறன்களை அதிகரித்தல்.
• தொழிலாளர்
உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களை சரியான முறையில் ஒருங்கிணைக்க
ஏற்பாடு செய்தல்.
• பாதுகாப்பான
மற்றும் நிலையான விவசாய முறைகள் மற்றும் பணி நிலைமைகளை ஊக்குவித்தல்.
நியாயமான வணிகம் என்பது
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிறந்த விலை, சிறந்த
வேலைவாய்ப்பளித்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பான நியாயமான விதிமுறைகளை அளிப்பதாகும்.
• பொருளாதார
ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
• வெளிப்படைத்தன்மை
மற்றும் பொறுப்புணர்வு.
• நியாயமான
வர்த்தக நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
• குழந்தை
தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
• பாகுபாடின்மை
பாலின சமத்துவம் சமபங்கு மற்றும் கூட்டமைப்பு சுதந்திரம் ஆகியவற்றுக்கு
அர்ப்பணித்தல்.
• திறனை
வளர்த்தல் மற்றும் நியாயமான அமைப்பினை மேம்படுத்துதல்.
• சுற்றுசூழலுக்கு
மதிப்பளித்தல் ஆகியனவாகும்.
1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காட்டின்
நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. இதன் இயக்குநர் ஜெனரல் ஆர்தர்
டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட ஒப்பந்த வரைவு “டங்கல்
வரைவு" என்று அழைக்கப்பட்டது. காட்டின் (GATT) முக்கிய
நோக்கம், அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான
கட்டணங்களையும், ஒதுக்கீடுகளையும், மானியங்களையும்
குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகும்.
காட்டின்
(GATT) சுற்றுகள்
• i வது ஜெனிவா (சுவிசர்லாந்து) - 1947
• II
வது அன்னிசி (பிரான்ஸ்) - 1949
•
III வது டார்க்குவே
(இங்கிலாந்து) - 1950-51
•
IV, V மற்றும் VI ஜெனிவா (சுவிட்சர்லாந்து) - 1956, 1960-61, 1964-67
•
VII வது டோக்கியோ
(ஜப்பான்) - 1973-79
• 1986-1994இல் VIII வது மற்றும் இறுதிச்
சுற்று பன்டாடெல் எஸ் டீ (உருகுவே). இதை "உருகுவே சுற்று" என அழைத்தனர்.
1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு
காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது. WTO உடன்படிக்கை
ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
உலக
வர்த்தக அமைப்பு
(World
Trade Organisation)
தலைமையகம்
: ஜெனிவா, சுவிட்சர்லாந்து நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
உறுப்பினர்கள்: தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர் -4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்
உலக வர்த்தக அமைப்பு (WTO)
உலக
வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள் :
• அயல்
நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
• வர்த்தக
தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை
வழங்குதல்.
• வர்த்தக
தகராறுகளைக் கையாளுதல்.
• நிலையான
முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
• உலக
வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக
இருத்தல்.
• முடிவெடுக்கும்
செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
• முழு
வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
அறிவுசார் பண்டங்களின்
உரிமைகள் என்பது “ஒரு வணிக மதிப்புடன் கூடிய தகவல்" என
வரையறுக்கலாம். TRIPSன் கீழ் பண்டங்கள் அல்லது செயல்முறைகள், அனைத்து
துறைகளின் தொழில் நுட்பங்களில், எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை வழங்குகிறது. TRIPS ஒப்பந்தத்தில்
ஏழு பகுதிகள் அறிவார்ந்த சொத்து உரிமைகளை உள்ளடக்கியுள்ளது.