உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்
• ஒரு
சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை
அறிமுகப்படுத்துகிறது.
• வாழ்க்கைத்
தரம் அதிகரித்துள்ளது.
• உலகமயமாக்கல்
வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
• புதிய
தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள்
அறிமுகப்படுத்தப்பட்டது.
• உலகமயமாக்கல்
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்
• இது
பண்டங்களை தடையற்றதாகவும் தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு
நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.
• நாடுகளுக்கிடையே
மிக அதிகமான மூலதனமானது நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை
அறிமுகப்படுத்துகிறது.
• தேசிய
ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான
உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.
• முக்கிய
உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான
வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை
அதிகரிக்கும்.
• அந்நிய
செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
• சுற்றுச்சூழல்
பற்றிய தரங்களும், கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
• உலகமயமாக்கலில்
நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
• வளர்ந்து
வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது
அச்சத்திற்குரியதாகும்.
• உலகமயமாக்கலினால்
உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர்
உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு
கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
• இது
உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
• உலகமயமாக்கலால்
குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
• மக்கள்
அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல் நலக் குறைவு மற்றும் நோய்
பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
• உலகமயமாக்கல்
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்நிய
செலாவணி கட்டுப்பாட்டுச்சட்டம் 1974 (Foreign Exchange Regulation Act) : இந்த சட்டம் இந்தியாவில் பன்னாட்டு
நிறுவனங்களின் செயல்பாட்டை நேரடியாக குறிப்பிடுகிறது.
அந்நிய
செலாவணி மேலாண்மைச்சட்டம் 1999 (Foreign
Exchange Management Act): இது பாராளுமன்றத்தால் 1999ல்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. “கட்டுப்பாட்டுக்கு” மாறாக “நிர்வாகத்தை” FEMAவின் கீழ் வலியுறுத்தியது.