இந்தியாவில் உலகமயமாக்கல்
இந்தியாவில் 1980-81க்கு
பிறகு 1990-91களில் நடைபெற்ற வளைகுடா போரின் காரணமாக எண்ணெய் விலை
அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசியாவின் போர்க்குணம் ஆகியவற்றின் காரணமாக கடுமையான
அயல்நாட்டு வாணிபச் செலுத்து சமநிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறிப்பிடத்தக்கது
புதிய அரசு ஜூன் 1991இல்
பொறுப்பு ஏற்றவுடன் இந்தியா அயல்நாட்டு செலுத்து சமநிலையில் முன் எப்போதும் இல்லாத
நெருக்கடியை சந்தித்தது.
சில சர்வதேச
நிறுவனங்களால் இந்தியாவின் கடன் மதிப்பீடு குறைந்ததுடன், இங்கிருந்து
அதிகமான மூலதனமும் வெளியே சென்றது.
இந்தியா சர்வதேச
சந்தையில் தனது கடன் தரும் தகுதியை இழந்ததால், இங்கிலாந்து
வங்கியில் (Bank of England) 40டன் தங்கத்தை அடமானம் வைத்தது. இந்த சூழ்நிலையில், ஜூலை 1991இல்
அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல்
மற்றும் உலகமயமாக்கல் (LPG) ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்கை மாற்றங்களுடன்
வழங்கியது. இந்த கொள்கைகள் இந்தியாவில் 1994ஆம் ஆண்டில் “டங்கல் வரைவை” கையெழுத்திட்ட போது பலப்படுத்தப்பட்டது.
1. சில தொழிற்சாலைகளைத் தவிர, தொழில்
உரிமம் பெறுவதை நீக்கியது.
2 பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
3. இந்தியாவின் பொருள்களின் ஏற்றுமதி பரிமாற்றத்தில்
நிலையான பணத்தின் மாற்று வீதத்தை சரி செய்தது.
4. வெளிநாட்டு தனியார் துறை நடப்பு கணக்கில் இறக்குமதி
வரியை குறைப்பதன் மூலம் வர்த்தகத்தில் ரூபாய் மாற்றத்தை உருவாக்கியது. 5. அயல்நாட்டு
செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
6. இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான
நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.