Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள்

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள்

கார்பன் மின்தடையாக்கிகளில் பீங்கான் உள்ளகத்தின் மீது மெல்லிய கார்பன் படிகம் வார்க்கப்பட்டிருக்கும்

கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள் 

 

கார்பன் மின்தடையாக்கிகளில் பீங்கான் உள்ளகத்தின் மீது மெல்லிய கார்பன் படிகம் வார்க்கப்பட்டிருக்கும் (படம் 2.11). இந்த மின்தடையாக்கிகள் செலவு குறைவானதாகவும் சிறிய அளவிலும், நீண்ட நாள் உழைக்கக்கூடியனவாகவும் அமைகின்றன. மின்தடையாக்கிகளின் மதிப்பைக்கான அதன்மீது வரையப்பட்ட நிற வளையங்கள் பயன்படுகின்றன. இதனை அட்டவணை 2.2 ல் காணலாம்.

முதல் இரண்டு வளையங்கள் மின்தடையின் முக்கிய எண்ணுருக்களாகவும், மூன்றாவது வளையத்திற்குறிய எண் குறியீடு பத்தின் அடுக்கு பெருக்கலாகவும் அமையும். நான்காவது வளையம் மின்தடை மாறுபடும் அளவை (Tolerance) குறிக்கும்.


நான்காவது வளையம் இடம் பெறவில்லையெனில் மாறுபடும் அளவு 20% ஆகும்.

படம் 2.12 ல் காட்டப்பட்டுள்ள மின்தடையாக்கியில், முதல் இலக்கம் = 5 (பச்சை), இரண்டாவது இலக்கம் = 6 (நீலம்), பத்தடிமான பெருக்கம் = 103 (ஆரஞ்சு) மற்றும் மாறுபடும் அளவு = 5% (தங்கம்). மின்தடையாக்கியின் மதிப்பு = 56 X 103அல்லது 56 k மற்றும் மாறுபடும் அளவு 5%.

12th Physics : UNIT 2 : Current Electricity : Color code for Carbon resistors in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள் - : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்