பொருளாதாரம் - பகிர்வு பற்றிய ஆய்வு: அறிமுகம் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis
அத்தியாயம் 6
பகிர்வு பற்றிய ஆய்வு
"சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட செல்வங்களை, உற்பத்தியில் ஈடுபட்ட உற்பத்திக் காரணிகளின் முகவர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதைக் குறிக்கும்".
- சேப்மேன்
கற்றல் நோக்கங்கள்
1 உற்பத்தி காரணிகளிடையே வருவாயை பகிர்ந்தளித்தல் பற்றிய அறிவைப் பெறுதல்.
2. வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் பற்றிய கோட்பாடுகளை மாணவர்கள் - புரிந்துகொள்ளும்படி செய்தல்.
முன்னுரை
உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில் முனையும் திறன் அல்லது அமைப்பு போன்றவை உற்பத்தியில் ஈடுபடுகின்றன. இவ்வுற்பத்திக் காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை பகிர்வுச் சார்பு கோட்பாடு விளக்குகிறது. காரணிகளின் விலைத் தீர்மானக் கோட்பாடு பொதுவாக பகிர்வுக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான அனுபவம் என்னவெனில் பல பொருளியலாளர்கள் பல கருத்துருக்களையும் காரணிகளையும் அறிமுகப்படுத்தி பொருளியல் அறிவியலை மேம்படுத்தியுள்ளனர்.