Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கருத்துரு வினாக்கள் விடைகள்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் விடைகள் | 11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies

   Posted On :  06.11.2022 03:35 am

11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்

கருத்துரு வினாக்கள் விடைகள்

இயற்பியல் : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எண்ணியல் கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் : கருத்துரு வினாக்கள் விடைகள்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் 

கருத்துரு வினாக்கள்


1. மரம் வெட்டப்படும்போது, மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையின் பக்கமே வெட்டப்பட வேண்டியது ஏன்? 

விடைகள்:

i) மரத்தை வீழ்த்த வேண்டிய திசையில் அடியிலிருந்து செயல்படும் செங்குத்து விசை நீண்டநேரம் இருக்கக் கூடாது. 

ii) ஈர்ப்பு விசை ஒரு திருப்பு விசையை ஏற்படுத்த வேண்டும். 

iii) ஆகையால் மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையிலேயே வெட்ட வேண்டும். 


2. மூட்டை தூக்கும் தொழிலாளி மூட்டையை முதுகில் சுமக்கும் போது முன்னோக்கி சாய்வது ஏன்?  

விடைகள்:

1) மூட்டையை முதுகில் சுமக்கும் போது அவர் மீது விசை செயல்படும் ஈர்ப்பு மையம் உடலை விட்டு முன்னோக்கி செல்கிறது. 

ii) இது நிலையை தடுமாறச்செய்யும். 

iii) எனவே முன்னோக்கி குனியும் போது விசை செயல்படும் ஈர்ப்பு மையம் மனித உடலின் மேலே செயல்படுகிறது.


3. தீக்குச்சி ஒன்றை விரல் நுனியில் சமன் செய்வதை விட மீட்டர் அளவுகோள் ஒன்றை அதே போல் சமன் செய்வது எளிமையாக இருப்பது ஏன்? 

விடைகள்:

i) மீட்டர் அளவுகோலின் ஈர்ப்பு மையம், தீக்குச்சியின் ஈர்ப்பு மையத்தை விட செங்குத்தாக வைக்கும்போது உயரமாக உள்ளது. 

ii) ஈர்ப்பு மையம் புவியிலிருந்து குறைவான உயரத்தில் இருப்பதைவிட அதிக உயரத்தில் இருப்பதால் எளிதில் சமன் செய்து கொள்கிறது. 

iii) எனவே தீக்குச்சியை விட மீட்டர் அளவுகோலை சமநிலையில் வைப்பது எளிது.


4. இரு சமமான அளவு பாட்டில்களில் ஒன்றை நீர் நிரப்பியும் மற்றொன்றை காலியாகவும் கொண்டு சாய்தளத்தில் கீழ் நோக்கி உருளுமாறு அனுமதிக்கப்படு கிறது. இவற்றில் எது சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் அடையும்? விளக்குக.

விடைகள்: 

i) நீர் நிரப்பப்பட்ட பாட்டில் அடிப்பகுதியை முதலில் அடைகிறது.

ii). நிலைம திருப்புத்திறன் α 1 / கோண திசைவேகம் 

iii) காலியான பாட்டிலின் நிறை முழுவதும் அதன் மேற்பரப்பிலேயே பரவி இருக்கும். எனவே இதன் நிலைமத்திருப்புத்திறன் அதிகம், கோண திசைவேகம் குறைவு. ஆகையால் நீர் நிரப்பப்பட்ட பாட்டில் அடிப்பகுதியை முதலில் அடையும்.


5. கோண உந்தத்திற்கும் சுழற்சி இயக்க ஆற்றலுக்கும் இடையேயான தொடர்பை தருக. இவற்றிற்கு இடையேயான வரைபடத்தை வரைக. ஒத்த கோண உந்தம் கொண்ட இரு பொருட்களின் நிலைமத் திருப்புத்திறன்களை வரைபடம் மூலம் ஒப்பிடுக.

விடைகள்: 


இது Y = Kx2 என்ற சமன்பாட்டை ஒத்திருப்பதால் வரைபடம் பரவளையம் ஆகும். 

இரு பொருட்களின் கோண உந்தம் சமம் எனில்

KE α 1/I

இயக்க ஆற்றல் குறைவாக உள்ள பொருளின் நிலைமத்திருப்புத்திறன் அதிகம்.


6. செவ்வக கட்டையானது மேசையின் மீது அமைதி நிலையில் உள்ளது. கட்டையை நகரச் செய்ய மேசையின் தளத்திலிருந்து h உயரத்தில் கிடைத்தள விசை செலுத்தப் படுகிறது. மேசை கட்டையின் மீது செலுத்தும் செங்குத்து விசை N, h ஐச் சார்ந்து இருக்குமா? 

விடைகள்:

i) செங்குத்து விசை h யை சார்ந்தது

ii) உயரத்தை பொருத்து ஈர்ப்பு விசை மாறுபடுவதால் செங்குத்து விசையும் h யை சார்ந்து இருக்கும். 


7. மூன்று சாய்தளங்களில் ஒரே மாதிரியான திண்மக் கோளங்கள் கீழ்நோக்கி இயங்குகிறது. சாய்தளங்கள் A, B, C ஆகியவை ஒத்த பரிமாணத்தை உடையன. Aயில் உராய்வின்றியும், B-இல் நழுவுதலற்ற உருளுதலும் மற்றும் C-யில் நழுவி உருளுதலும் ஏற்படுகிறது. சாய்தளத்தின் அடிப்பகுதியில் இவற்றின் இயக்க ஆற்றல்கள் EA EB EC இவற்றை ஒப்பிடுக.

விடைகள்:

ஆற்றல் மாறா விதிப்படி நிலையாற்றல் பெற்றுள்ள இம்மூன்று கோளங்களும் இயக்க ஆற்றலை பெருகின்றன. 

எனவே சாய்தளத்தில் அடிப்பகுதியில் இவற்றின் இயக்க ஆற்றல்கள் EA, EB மற்றும் EC சமமாக உள்ளது.


8. கீழ்க்கண்ட கூற்று தவறு எனக் காட்ட ஓர் உதாரணம் தருக. “ஏதேனும் இரு விசைகள் ஒன்றிணைந்து ஒரே தொகுபயன் விசையாக ஒரு பொருளின் மீது செயல்படும் போது, விசை ஒரே விளைவை கொடுக்கும்”. 

விடைகள்:

ஒரு பொருளின் மீது செயல்படும் இரண்டு விசைகள் அவற்றுக்கிடையேயான கோணத்தை சார்ந்தது. 

இரு சம ஒத்த விசைகள் எதிரெதிர் திசையில் செயல்பட்டால் தொகுபயன் விசை சுழி. 

இரு சம விசைகள் ஒரே திசையில் செயல்பட்டால் தொகுபயன் விசை அதிகம்/இரு மடங்கு ஆகும். 

எனவே ஏதேனும் இரு விசைகள் ஒன்றிணைந்து ஒரே தொகுபயன் விசையாக ஒரு பொருளின் மீது செயல்படும் போது விசை ஒரே விளைவை கொடுக்காது. 

(எகா) இருநபர்கள் காரைத் தள்ளுவது


Tags : Motion of System of Particles and Rigid Bodies | Physics துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல்.
11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies : Conceptual Questions Answers Motion of System of Particles and Rigid Bodies | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் : கருத்துரு வினாக்கள் விடைகள் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்