Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

ஈர்ப்பியல் | இயற்பியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Physics : UNIT 6 : Gravitation

   Posted On :  06.11.2022 04:02 pm

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

இயற்பியல் : ஈர்ப்பியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக, பதில்கள் மற்றும் தீர்வுகளுடன் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள்

ஈர்ப்பியல் (இயற்பியல்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது. 

(a) அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும் 

(b) அனைத்து புள்ளிகளிலும் 

(c) அண்மை நிலையில் மட்டும் 

(d) எப்புள்ளியிலும் அல்ல

விடை : a) அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்

தீர்வு :

கோள்களின் பாதை நீள்வட்டப்பாதை, எனவே



2. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக் கிடையேயான ஈர்ப்பியல் விசை 

(a) மாறாது 

(b) 2 மடங்கு அதிகரிக்கும் 

(c) 4 மடங்கு அதிகரிக்கும்

(d) 2 மடங்கு குறையும் 

விடை : c) 4 மடங்கு அதிகரிக்கும்.

தீர்வு : 

F = G Mm/r2

F’ = G 2M.2m/r2 = 4[GMm/r2]


3. சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மைத் தொலைவு (r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் v1/v2 =


விடை : (a) r2/r1

தீர்வு : கோண உந்தம் மாறாது. 

L1 = mv1 , r1 & L2 = mv2 r2

L= L2

mv1 r1 = mv2 r2

V1 / V2 = r2 / r1 ( v  1 / r)


4. புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக் கோள்களின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல? 

(a) சுற்றுப்பாதையின் ஆரம் 

(b) துணைக்கோளின் நிறை 

(c) சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக் கோளின் நிறை ஆகிய இரண்டையும் 

(d) சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக் கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல 

விடை: (b) துணைக்கோளின் நிறை

தீர்வு :  

கெப்ளரின் சுற்றுக்கால விதிப்படி

T2 α r3 T2/r3 = மாறிலி

T = ஆரத்தைச் சார்ந்தது. 

எனவே நிறையை சாராதது. 


5. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள் 

(a) 64.5 

(b) 1032 

(c) 182.5 

(d) 730 

விடை : (b) 1032 

தீர்வு :  



6. கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதியானது ……. மாறாவிதிப்படி அமைந்துள்ளது. 

(a) நேர்கோட்டு உந்தம் 

(b) கோண உந்தம் 

(c) ஆற்றல்

(d) இயக்க ஆற்றல்

விடை: (b) கோண உந்தம் 


7. புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் 

(a) எப்பொழுதும் நேர்க்குறி உடையது 

(b) எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

(c) நேர்க்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும் 

(d) எப்பொழுதும் சுழி 

விடை : (b) எப்பொழுதும் எதிர்க்குறி உடையது. 

தீர்வு: 

புவியைப் பொருத்து நிலவின் ஈர்ப்பு

நிலை ஆற்றல் W = -GMm/r

(g க்கு எதிரே வேலை செய்வதால் v எதிர்க்குறி பெறும்) 


8. சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் கோள் ஒன்று A, B மற்றும் C ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, Kb, மற்றும் Kc ஆகும். இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், 


(a) KA > KB >KC

(b) KB < KA <KC

(c) KA < KB <KC

(d) KB > KA >KC

விடை : a) KA>KB>KC 

தீர்வு :

KE = GmEmS / (RE + h)

KE  1 / Re

KA > KB > KC



9. புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை 

(a) எப்பொழுதும் சுழி 

(b) எப்பொழுதும் நேர்குறி உடையது 

(c) நேர்க்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

(d) எப்பொழுதும் எதிர்குறி உடையது

விடை : (c) நேர்க்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும். 

தீர்வு :

கெப்ளர் விதிப்படி, புவி சூரியனுக்கு 

அருகில் இ.ஆ.

சூரியனுக்கு தொலைவில் இ.ஆ. 


10. புவியின் நிறையும் ஆரமும் இரு மடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g 

(a) மாறாது 

(b) g/2 

(c) 2g 

(d) 4g 

விடை : (b) : g/2

தீர்வு :

g = GM / R2

g = G(2M) / (2R)2 = 2GM / 4R2 = 1/2 (GM / R2)

g = g / 2


11. புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு 

(a) ஆண்டு முழுவதும் மாறாது 

(b) ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை மாதத்தில் அதிகமாகவும் இருக்கும். 

(c) ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும். 

(d) பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும். 

விடை: (c) ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும். 


12. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால் அவர் எடையானது 

(a) அதிகரிக்கும் 

(b) குறையும் 

(c) மாறாது

(d) அதிகரித்து பின்பு குறையும் 

விடை : (b) குறையும் 

தீர்வு :


கடல் மட்டத்திலிருந்து சென்னை உயரம் = 6.7 m  

கடல் மட்டத்திலிருந்து திருச்சி 88m உயரத்தில் உள்ளது. மின் உயர்த்தி தத்துவப்படி .W = m (g + a)


13. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின் உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது தராசு காட்டும் அளவீடு. 

(a) 98N 

(b) சுழி 

(c) 49N 

(d) 9.8N

விடை : (b) சுழி 

தீர்வு:


m =10 kg 

w = m (g-a) 

w = m(g-g); w = 0


14. ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால் விடுபடு வேகம் 

(a) மாறாது 

(b) 2 மடங்காகும் 

(c) பாதியாகும் 

(d) 4 மடங்காகும்

விடை : (b) 2 மடங்காகும்

தீர்வு :

Ve = √[2gR]

g = 9.8ms-2 .

e = √[2(4g)R]

e = 2√(2gR) = 2Ve


15. புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் 

(a) நிலை ஆற்றலுக்குச் சமம் 

(b) நிலை ஆற்றலை விடக்குறைவு 

(c) நிலை ஆற்றலை விட அதிகம் 

(d) சுழி 

விடை : (b) நிலை ஆற்றலை விடக் குறைவு.

தீர்வு :

உயரம் அதிகரித்தால் நிலை ஆற்றல் அதிகரிக்கும். இயக்க ஆற்றல்  குறையும்.

KE = 1/2 [ GmEmS / (Re + h) ]

U = − GmEmS / (RE + h)

  KE = U / 2

KE < U


1) a    2) c    3) a    4) b   5) b

6) b   7) b   8) a    9) c    10) b

11) c  12) a  13) b 14) b 15) b

Tags : Gravitation | Physics ஈர்ப்பியல் | இயற்பியல்.
11th Physics : UNIT 6 : Gravitation : Choose the correct answers Gravitation | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - ஈர்ப்பியல் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்