Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory

   Posted On :  16.08.2023 03:41 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

பிளாசிப் போர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. இது ஏகாதிபத்திய, விரிவாக்க, மற்றும் சுரண்டல் கொள்கையை கொண்டிருந்தது.

முடிவுரை

பிளாசிப் போர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. இது ஏகாதிபத்திய, விரிவாக்க, மற்றும் சுரண்டல் கொள்கையை கொண்டிருந்தது. இக்கம்பெனி துணைப்படைத் திட்டத்தின் மூலமும், வாரிசு இழப்புக் கொள்கை மூலமும் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இக்கொள்கைகள் 1800-01ஆம் ஆண்டு தென்னிந்திய கலகத்திற்கும், 1806ஆம் ஆண்டு வேலூர் கலகத்திற்கும், 1857ஆம் ஆண்டு பெரும்புரட்சிக்கும் இட்டுச் சென்றது.

 

மீள்பார்வை

•சிராஜ்-உத்-தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.

•அலிநகர் உடன்படிக்கை 1757 பிப்ரவரி 9 ஆம் நாள் கையெழுத்திடப்பட்டது.

•கர்நாடகப் போர்கள் 1746 முதல் 1763 வரையிலான காலத்தில் நடைபெற்றது.

•திப்பு சுல்தான் போர் இழப்பீட்டுத் தொகையாக 3.6 கோடி ரூபாயினை ஆங்கிலேயருக்கு வழங்க உடன்பட்டார்.

•1799ஆம் ஆண்டு திப்பு சுல்தானுக்கு எதிராக வெல்லெஸ்லி பிரபு போர் அறிவித்தார்.

•காரன்வாலிஸ் பிரபு, ‘தரோகா’ என்பவரை தலைவராகக் கொண்ட சரகங்கள் அல்லது 'தானாக்கள்' என்ற காவல் பகுதிகளை ஏற்படுத்தினார்.

•வங்காளத்தின் வில்லியம் கோட்டை உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

•வெல்லெஸ்லி பிரபு துணைப்படைத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்த பெரும்பான்மையான சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

•டல்ஹௌசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமானவர்களில் முதன்மை சிற்பியாக செயல்பட்டார்.



மேற்கோள் நூல்கள்

1. Bipan Chandra - History of Modern India, Orient Blackswan Private Limited 2018

2. R.C.Majumdar - An Advance History of India, Macmillan and Co., Limited London 1953.

3.vincent A.Smith – The Oxford History of india. From the Earliest Times to the end of 1911-1919- Oxford At The Clarendon press.

ppppppppppppppppppppppppp

 

இணையச் செயல்பாடு

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை


இச்செயல்பாட்டின் மூலம் இந்தியாவின் காலனித்துவக் கால வரைபடங்களை அறியச் செய்தல்.

படிநிலைகள்

படி1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி2: சுட்டியைக் கீழ் நோக்கி உருட்டி, ஏதேனும் ஒரு காலத்தைச் சொடுக்குக. (ex. COLONIAL MAPS)

படி3: ஒவ்வொரு தலைப்பாகச் சொடுக்கி வரைபடங்களை நன்கு அறிந்து கொள்க. (ex. Historical maps, c.1750 to 1800)

உரலி:

http://ektara.org/magazine/histmaps.html

Tags : From Trade to Territory | Chapter 2 | History | 8th Social Science வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory : Conclusion, Recap, Glossary From Trade to Territory | Chapter 2 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை : முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை