வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வாரிசு இழப்புக் கொள்கை (1848) | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory
வாரிசு இழப்புக்
கொள்கை (1848)
டல்ஹௌசி
பிரபு இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்தார்.
அவர் ஓர் ஏகாதிபத்தியவாதி ஆவார். ஆங்கிலேய பேரரசை விரிவுபடுத்துவதற்காக அவர் வாரிசு
இழப்புக் கொள்கை என்ற புதிய கொள்கையை கொண்டு வந்தார். 1848ஆம் ஆண்டு அவர் அறிவித்த
இக்கொள்கையின் படி, சுதேச மன்னர்கள் ஆங்கிலேயரின் அனுமதி இன்றி வாரிசுகளை தத்தெடுக்க
நேரிடும் போது, மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும், மன்னரின் ஆட்சிப்பகுதி
ஆங்கிலேயரின் தலையாய சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது. இக்கொள்கையினை இந்தியர்கள்
கடுமையாக எதிர்த்தனர். 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு இக்கொள்கை முக்கிய காரணமாக
அமைந்தது.
வாரிசு இழப்புக் கொள்கையின்
மூலம் டல்ஹௌசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகள்: சதாரா (1848), ஜெய்த்பூர், சம்பல்பூர்
(1849), பகத் (1850), உதய்பூர் (1852), ஜான்சி (1853) மற்றும் நாக்பூர் (1854)
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான
காரணங்கள்
•மிகப்பெரிய
கடல் வலிமை.
•நெசவுத்
தொழில் வளர்ச்சி
•அறிவியல்
ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்.
•பொருளாதார
வளர்ச்சி மற்றும் ஆங்கிலேயரின் திறமைமிக்க இராஜதந்திரம்.
•இந்திய
வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை உணர்வுகள்.
•இந்திய
அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை