வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - துணைப்படைத் திட்டம் (1798) | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory
துணைப்படைத்
திட்டம் (1798)
இந்தியாவில்
இருந்த சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபுவால்
அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத்திட்டமாகும். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை
விரிவுப்படுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் மிகச்சிறந்த கருவியாக
பயன்படுத்தப்பட்டது. சுதேச அரசுகள் பாதுகாக்கப்பட்ட அரசுகள் என்றழைக்கப்பட்டது. அவ்வரசுகள்
மீது தலையாய அதிகாரம் செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர். படையெடுப்புகளிலிருந்து
சுதேச அரசுகளை காப்பதும், உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை என்ற
நிலை உருவானது.
துணைப்படைத் திட்டத்தின் முக்கிய
அம்சங்கள்
•இத்திட்டத்தில்
இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்துவிட்டு ஆங்கிலேயரின் படையை ஏற்றுக் கொள்ள
வேண்டும்.
•சுதேச
அரசின் தலைமையகத்தில் ஆங்கிலேயரின் பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
•ஆங்கிலேயரின்
படையை பராமரிக்கவும், படை வீரர்களின் ஆண்டுச் சம்பளம் வழங்குவதற்காகவும், நிரந்தரமாக
சில பகுதிகளை அந்நாட்டு அரசர் ஆங்கிலேயருக்கு வழங்க வேண்டும்.
•ஆங்கிலேயரைத்
தவிர மற்ற ஐரோப்பிய அலுவலர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
•சுதேச
நாட்டு அரசர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதி பெற்ற பின்னரே அயல் நாடுகளுடன்
ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
•அந்நிய
அரசுகளின் தாக்குதல் மற்றும் உள்நாட்டு கலவரம் நடைபெறும்போது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
அந்நாட்டை பாதுகாக்கும்.
துணைப்படைத் திட்டத்தின் முக்கிய
அம்சங்கள்
•ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனி, இந்திய சுதேச அரசர்களின் செலவிலேயே தன்னுடைய படையை பராமரித்தது.
•சுதேச
அரசர்களிடம் பணியில் இருந்த அனைத்து பிரெஞ்சுக்காரர்களும் நீக்கப்பட்டனர். பிரெஞ்சுக்காரர்கள்
இந்தியாவில் மீண்டும் எழுச்சி பெறும் அபாயம் முற்றிலும் நீங்கியது.
•கம்பெனி,
சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
•வெல்லெஸ்லி
பிரபுவின் இந்த இராஜதந்திர முயற்சி ஆங்கிலேயரை இந்தியாவில் தலையாய சக்தியாக மாற்றியது.
இவர் இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு என்பதை இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு என்று மாற்றினார்.
சுதேச அரசுகளுக்கு ஏற்பட்ட இழப்புகள்
•துணைப்படைத்
திட்டம் இந்திய சுதேச அரசர்களை பலவீனமானவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் மாற்றியது.
• பிரிட்டிஷ்
கம்பெனியால் பாதுகாக்கப்பட்ட அரசர்கள் தங்கள் குடிமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
அவர்களை சுரண்டினர்.
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்
கொண்ட முதல் சுதேச அரசு ஹைதராபாத் (1798). அதனை தொடர்ந்து ஏற்றுக்கொண்ட இந்தியா அரசுகள்
தஞ்சாவூர் (1799), அயோத்தி (1801), பேஷ்வா (1802), போன்ஸ்லே (1803), குவாலியர்
(1804), இந்தூர் (1817), ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் (1818)