அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory
அலகு - 2
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
கற்றலின்
நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றுக்கொள்வதின் மூலம் மாணவர்கள் கீழ்க்கண்ட அறிவினைப்
பெறுகின்றனர்
>ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் வலிமை மற்றும் எழுச்சி
>பிளாசிப் போர் மற்றும் பக்சார் போரின் நிகழ்வுகள் மற்றும் தாக்கம்
>கர்நாடகப் போர்கள் மற்றும் மைசூர் போர்கள்
>காலணி ஆதிக்க நாடுகளின் இராணுவ வளர்ச்சி, உள்நாட்டு நிர்வாகம்
>துணைப்படைத் திட்டம் மற்றும் வாரிசு இழப்புக் கொள்கை
அறிமுகம்
15ஆம்
நூற்றாண்டில் நிலவழியாகவும், கடல் வழியாகவும் புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் சகாப்தமாக
ஐரோப்பா விளங்கியது. 1498ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா
ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார். இத்தகைய புதிய
நிலவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கம் வணிகத்தின் மூலம் அதிக லாபம் பெறுவதும்
மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும். வங்காளத்தின் வெற்றிக்குப் பின்
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இதன் முக்கிய நோக்கம்
வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும்.