எக்ஸெலை பயன்படுத்தி CSV கோப்பினை உருவாக்குதல்
மைக்ரோ சாப்ட் எக்ஸெல் பயன்பாட்டை பயன்படுத்தி CSV கோப்புகளை
உருவாக்க, எக்ஸெல் பயன்பாட்டை திறந்து வடிவத்தை CSV வடிவத்தில் சேமிக்க விரும்பும்
கோப்பினை திறக்கவும். எடுத்துக்காட்டாக, எக்ஸெல் அட்டவணைத்தாள் மாதிரி தரவுகளைக் கொண்டுள்ளது.
அட்டவணைத்தாளில் தரவுகளை உள்ளிட்ட பிறகு File -> Save As என்ற விருப்பத்தினை தேர்வு
செய்யவும். "Save as type option”
என்பதில் CSV காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு தேர்வு செய்யவும். கோப்பின் பெயருடன்
CSV நீட்டிப்பினை தேர்வு செய்யவும்.
கோப்பினை சேமித்த பிறகு அக்கோப்பினை உரைப்பதிப்பானை பயன்படுத்தி
எளிதாக திறக்கலாம் மேலும் பதிப்பாய்வு செய்யவும் முடியும். இதன் உள்ளடக்கமானது பின்வருபவனவற்றை
ஒத்திருக்கும்.
Item Name, Cost-Rs, Quantity, Profit
Keyboard, 480, 12, 1152
Monitor, 5200, 10, 10400
Mouse, 200, 50, 2000
,,Total Profit =,13552
மைக்ரோ சாப்ட் எக்ஸெல் பயன்பாடானது கணினியில் நிறுவப்பட்டிருந்தால்
CSV கோப்பின் மீது இருமுறைகிளிக் செய்தவுடன் தாமாகவே எக்ஸெல் பயன்பாட்டை பயன்படுத்தி
CSV கோப்பானது திறக்கும்.
CSV கோப்பினை திறக்கும் போது மேல்மீட்பு பெட்டியில் Open
with தோன்றினால் அதில் மைக்ரோ சாப்ட் எக்ஸெல் என்பதை தேர்வு செய்யவும்.
இம்முறைக்கு மாற்றாக MICROSOFT
EXCEL பயன்பாட்டை திறந்து பட்டிப்பட்டையில் இருந்து File -> Open என்பதை தேர்வு செய்து, அதில் CSV கோப்பினை தேர்வு செய்யவும்.
கோப்பின் பெயரானது தோன்றவில்லை எனில் கோப்பின் நீட்டிப்பினை மாற்றம் செய்து
(*.prn,*.txt, *.Csv) திறக்கலாம்.
உங்களுக்குத்
தெரியுமா?
மைக்ரோ
சாப்ட் எக்ஸெல் மற்றும் ஸ்டார் ஆஃபீஸ் கால்க் என்ற இரண்டு பயன்பாடுகளுமே கணினியில்
நிறுவப்பட்டிருந்தால் CSV கோப்பானது தானமைவாக எக்ஸெல் பயன்பாட்டின் மூலம் திறக்கப்படும்.