CSV கோப்புகளின் பயன்பாடுகள்
தரவுத்தளம் அல்லது அட்டவணைச் செயலியில் உள்ள அட்டவணை வகை தரவுகளை
சேமிக்க ஒரு எளிய கோப்பு வடிவமாக CSV பயன்படுகிறது. எளிய உரைவடிவ கோப்பாக இருப்பதனால்
நாம் பயன்படுத்தும் மென்பொருளை பொருட்படுத்தாமல் அட்டவணைச் செயலி அல்லது தரவுத்தளத்தில்
இறக்கம் செய்ய இது எளியதாகும்.
CSV கோப்புகளை திறப்பதற்கும் அவற்றை எளிதாக படிப்பதற்கும் அட்டவணைச்
செயலியான மைக்ரோசாஃட் எக்ஸெல் அல்லது ஏதேனும் ஒரு உரை பதிப்பான் அல்லது ஒரு ஏதேனும்
ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தலாம்.
குறிப்பு
CSV
கோப்பு விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்களை தேக்கி வைக்காது. வடிவூட்டலைக் கொண்டிராத
உரைகள், வாய்பாடுகள் மற்றும் மேக்ரோக்கள் போன்றவற்றைக் கொண்டிராத தரவுகளை மட்டும் சேமிக்கும்.
ஆங்கிலத்தில் MODULES, FUNCTIONS, PROCEDURES என்ற வார்த்தைகள்(Functions) செயற்கூறுகளைக்
குறிக்கும் பொதுவான சொற்களாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
CSV
கோப்பானது FLAT FILE எனவும் அழைக்கப்படும். தரவுகளை அட்டவணையாக சேமிக்கும் நிரல்களான
மைக்ரோ சாஃட் எக்ஸெல் அல்லது ஓபன் ஆஃபீஸ் கால்க் போன்றவற்றில் CSV வடிவ கோப்புகளை இறக்கம்
(import) மற்றும் ஏற்றம் (export) செய்து கொள்ள முடியும்.