பைத்தான் மற்றும் CSV கோப்புகள் - நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 13 : Database concepts and MySql : Python and CSV Files
நினைவில் கொள்க
• CSV கோப்பானது
ஒவ்வொரு வரிசையிலும் காற்புள்ளி அல்லது வேறு ஏதேனும் ஒரு பிரிப்பானைக் கொண்டு பிரிக்கப்பட்ட
பல புலங்களை கொண்டுள்ள பயனர் படிக்கக் கூடிய உரை கோப்பாகும்.
• எக்ஸெல் கோப்பானது ஒரு இருமநிலை வடிவ கோப்பாகும். அதே சமயம்
CSV கோப்பானது ஒரு எளிய உரை வடிவ கோப்பாக
இருக்கும்.
• CSV கோப்பினை
படிக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன. Csv.reader() செயற்கூறை பயன்படுத்துதல் மற்றும்
DictReader இனக்குழுவை பயன்படுத்துதல்.
• எழுதுதல் மற்றம் படித்தல் செயல்பாடுகளில் CSV கோப்பின் கொடாநிலை
உரை முறையாகும்.
• உரை அல்லாத கோப்பு உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்புகளை
கையாளும் போது இருமநிலை முறைமையானது பயன்படுத்தப்படும்.
• நினைவகத்தில் பயன்பாட்டில் இல்லாத பொருள்களை (Objects) சேகரிக்கவும் மற்றும் அந்த நினைவக
பகுதியை சுத்தம் செய்யவும் பைத்தானில் தேவையற்ற நினைவக பகுதியை சேகரிக்கும் வசதி
(Garbage collector) உள்ள து.
• close() முறையானது
கோப்புடன் இணைக்கப்பட்டுள்ள வளங்களை விடுவிக்கும்.
• CSV கோப்பானது
தானமைவாக எக்ஸெல் பயன்பாட்டில் திறக்கும்.
• CSV நூலகமானது
CSV கோப்பினில் உள்ள தரவுகளை படிப்பதற்கும்,
CSV கோப்பினில் தரவுகளை எழுதுவதற்கும்
செயல்படுத்துவதற்கும் தேவையான பொருள்களையும் மற்றும் குறிமுறைகளையும் கொண்டிருக்கும்.
• "skipinitialspace” பிரிப்பானிற்கு பிறகு உள்ள வெற்று
இடைவெளியை நீக்க பயன்படும்.
• ஒன்றிக்கு மேற்பட்ட நெடுவரிசையை வரிசையாக்கம் செய்ய
operator.itemgetter() பயன்படுகிறது.
• Dictionary யில் தரவுகளை குறிக்க யில் தரவுகளை குறிக்க
CSV செயற்கூறின் DictReader() என்ற இனக்குழு ஒரு பொருளை உருவாக்குகின்றது.
• CSV கோப்பில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட பிரிப்பான் படிக்கப்படுகிறது.
• itemgetter() ஒன்றிக்கு மேற்பட்ட சுட்டென் மூலம் ஒன்றிற்கு
மேற்பட்ட நெடுவரிசைகளை வரிசையாக்கம் செய்ய பயன்படும்.
• csv.reader மற்றும் CSV.Writer list/tuple-ல் வேலை செய்யும், ஆனால் csv.DictReader மற்றும் CSV. DictWriter dictionary-ல் வேலை செய்யும்.
• csv.DictReader மற்றும் Csv.DictWriter கூடுதல் அளபுருக்காகபுலத்தின் பெயரை எடுத்துக்கொண்டு அவற்றை Dictionary-யின் திறவுகோளாக பயன்படுத்துகிறது.
• xdict() செயற்கூறு dictionary வடிவத்தில் தரவினை எந்தவொரு
வரிசையிலும் அமைக்காமல் வெளியீடும்.
• csv.Writer() செயற்கூறு பயனரின் தரவை பிரிப்பானுடன் கூடிய
சரங்களாக மாற்றியமைக்க ஒரு writer பொருளை திருப்பி அனுப்பும்.
• writerow() செயற்கூறு ஒரு வரிசை மட்டுமே ஒரு சமயத்தில் எழுதும்.
writerows() செயற்கூறு அனைத்து தரவையும் ஒரே முறையில் எழுதும்.
• கோப்பின் இறுதியில் ஒரு வரிசையை சேர்பதை ஒரு வரிசை சேர்த்தல்
(appending) எனப்படும்.