Notepad உரை பதிப்பானை பயன்படுத்தி CSV கோப்புகளை
- உருவாக்குதல் (அல்லது எதேனும் ஒரு உரை பதிப்பான்)
CSV கோப்பானது ஓர் உரைக் கோப்பாகும். எனவே ஏதேனும் ஒரு உரைபதிப்பானை பயன்படுத்தி CSV கோப்புகளை உருவாக்கவோ அல்லது பதிப்பாய்வு செய்யவோ முடியும். ஆனால் CSV கோப்பானது அட்டவணைச் செயலி அல்லது தரவுத்தளத்தை ஏற்றம் செய்வதன் மூலமை உருவாக்கப்படும்.
1. சாதாரண CSV கோப்பினை உருவாக்குதல்
Notepad உரைப்பதிப்பனை கொண்டு CSV கோப்பினை உருவாக்க முதலில்
புதிய ஆவணத்தை பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி திறக்கலாம். அடுத்து, கோப்பில் உள்ளிடப்பட
வேண்டிய தரவின் ஒவ்வொரு வரி அல்லது வரிசையிலுருள்ள மதிப்புகளை காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு
உள்ளீடு செய்யவும். எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்ட விவரங்களை கருதி கொள்க.
Topic1, Topic2, Topic3
one, two, three
Example1, Example2, Example3
மேற்கண்ட கோப்பினை .CSV என்ற நீட்டிப்புடன் சேமிக்கவும். சேமிக்கப்பட்ட
கோப்பினை மைக்ரோ சாப்ட் எக்ஸெல் அல்லது ஏதேனும் ஒரு அட்டவணைச் செயலி மென்பொருளை பயன்படுத்தி
கோப்பினை திறக்கவும். மைக்ரோ சாப்ட் எக்ஸெலை பயன்படுத்தி மேற்கண்ட கோப்பினை திறக்கவும்,
உள்ளிடப்பட்ட தரவானது பின்வருமாறு அட்டவணை வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும்.
CSV கோப்பில் உள்ள புலத்தின் தரவுகள் காற்புள்ளியை தன்னுடன்
கொண்டிருந்தால், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த அத்தகைய பல தரவுகளை இரட்டை மேற்கோள்
குறியுடன் (") கொடுக்கவும். தரவின் ஒரு பகுதியாக காற்புள்ளியைகொள்ளவும்புலங்களை
பிரிக்க பயன்படும் பிரிப்பானான காற்புள்ளியில் இருந்து இதை பிரித்து காட்டும்.
2. காற்புள்ளியுடன் கூடிய தரவினைக் கொண்ட CSV கோப்பினை உருவாக்குதல்
எடுத்துக்காட்டாக, முகவரி புலம் காற்புள்ளியை கொண்டுள்ளதாக கருத்துக்
கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு நம் தரவாக இருப்பின்
முகவரி புலத்தில் உள்ள தரவுடன் காற்புள்ளியையும் சேர்த்து வெளிப்படுத்த
அத்தரவினை இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கவும். எடுத்துக்காட்டாக,
RollNo, Name, Address
12101, Nivetha,”Mylapore,Chennal”
12102, Lavanya,”Adyar,Chennal”
12103, Ram, “Gopalapuram,Chennal”
இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்பட்ட தரவுகள் மட்டும்
காற்புள்ளியுடன் வெளிப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். MS-எக்ஸெல் பயன்பாட்டை பயன்படுத்தி
மேற்கண்ட கோப்பினை திறக்கும் போது அது பின்வருமாறு தோற்றமளிக்கும்.
புலத்தரவுகளை புதிய வரியில் இருப்பின் அவற்றை வெளிப்படுத்த மேற்கண்ட
முறையே பயன்படுத்தலாம். ஏதேனும் புலத்தில் உள்ள தரவினை புதிய வரியில் வெளிப்படுத்த
வேண்டுமெனில் புலத்தின் தரவினை இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்க வேண்டும்.
CSV கோப்பில் இது பின்வருமாறு எழுதப்பட வேண்டும்.
RollNo, Name, Address
12101, Nivetha,”Mylapore,Chennal”
12102, Lavanya,”Adyar,Chennal”
12103, Ram, “Gopalapuram,Chennal”
3. இரட்டை மேற்கோள் குறிகளுடன் கூடிய தரவினை கொண்ட CSV கோப்பினை உருவாக்குதல்.
புலத்தில் உள்ள தரவானது இரட்டை மேற்கோள் குறிகளை ஒரு பகுதியாக
தன்னுடன் கொண்டிருந்தால், இரட்டை மேற்கோள் குறியானது இரட்டிப்பாக்கப்படல் வேண்டும்.
இதன் மூலம் அவைகள் சரியாக விளக்கப்படலாம்.
எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள தரவை கொடுக்க வேண்டுமெனில்,
இது
CSV கோப்பில் பின்வருமாறு உருவாக்கப்பட வேண்டும்.
RollNo, Name, FavoriteSports, Address
12101, Nivetha,””” Cricket ”;” Football ,
Mylapore chennai
12102, Lavanya," Basketball ”'”
Cricket”'', Adyar chennai
12103, Ram,””” Soccer”” Hockey”””,
Gopalapuram chennai
4. CSV கோப்பிலுள்ள தரவை வடிவூட்டம் செய்ய பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
1. ஒவ்வொரு வரிசையும் (தரவின் வரிசை) புதிய வரியில் இருத்த அந்த
வரியை நுழைவு பொத்தானை அழுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
Xxx,yyy
2. கோப்பினில் உள்ள கடைசி பதிவானது வரிமுறிவு/வரி செலுத்தி பிரிப்பானைக் கொண்டிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக:
3. சாதாரண பதிவு வரிசைகளின் வடிவங்களை போன்று கோப்பின் முதல்
வரிசையில் தோன்றக்கூடிய விருப்பத்தலைப்பு வரிசை இருக்கலாம். கோப்பின் தலைப்பானது புலங்களின்
தொடர்புடைய பெயரினை கொண்டிருக்க வேண்டும். மேலும் பதிவுகளிலுள்ள புலங்களின் எண்ணிக்கையில்
மீதமுள்ள கோப்பில் இருத்தல் வேண்டும்.
எடுத்துக்காட்டு
4. தலைப்பு மற்றும் ஒவ்வொரு பதிவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
புலங்கள் காற்புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கலாம். இடைவெளியானது புலத்தின் ஒரு பகுதியான
கருதப்படும் மேலும் நிராகரிக்கப்பட மாட்டாது. பதிவின் கடைசி காற்புலத்தை தொடர்ந்து
காற்புள்ளி இடம் பெறல் கூடாது. எடுத்துக்காட்டு: Red , Blue
5. ஒவ்வொரு புலமும் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படலாம்
அல்லது கொடுக்கப்படாமல் இருக்கலாம். புலமானது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படவில்லையெனில்,
புலங்களில் இரட்டை மேற்கோள் குறியானது தோன்றாது:
எடுத்துக்காட்டு
6. புலங்களில் வரிதிருப்பி (CRLF), இரட்டை மேற்கோள் குறி மற்றும்
காற்புள்ளி போன்றவைகளை கொண்டிருந்தால் அவைகள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்பட
வேண்டும்.
7. புலமானது இரட்டை மேற்கோள் குறிக்களுக்குள் கொடுக்கப்பட்டிருக்க
வேண்டுமெனில், இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் உள்ள புலமானது மற்றொரு இரட்டை மேற்கோள்
குறிகளுக்குள் அமைக்கப்பட வேண்டும்.
குறிப்பு
மேலே
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் (,,White) உள்ள இறுதி வரிசையில் இரண்டு காற்புள்ளிகளுடன்
தொடங்கியுள்ளது, ஏனென்றால் நமது அட்டவணையில் உள்ள பதிவின் முதல் இரண்டு வெற்று பதிவுகளாக
இருக்கின்றது. இந்த காற்புள்ளிகளை அழிக்க வேண்டாம். இந்த இரண்டு காற்புகள்ளிகளும் ஒரு
வரியிலிருந்து மற்றொரு வரியை உணர்த்த புலங்களாக பயன்படுகின்றது. இவற்றை தவிர்க்க கூடாது.