Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னோட்டவியல்: பாடச்சுருக்கம்

இயற்பியல் - மின்னோட்டவியல்: பாடச்சுருக்கம் | 12th Physics : UNIT 2 : Current Electricity

   Posted On :  16.10.2022 07:45 pm

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மின்னோட்டவியல்: பாடச்சுருக்கம்

இயற்பியல் : மின்னோட்டவியல் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

• கடத்தி வழியே பாயும் மின்னோட்டம் I = dQ/dt. இங்கு dQ என்பது dt கால இடைவெளியில்கடத்தியின் ஒரு குறுக்கு பரப்பு வழியாக பாயும் மின்துகள்களில் உள்ள மின்னூட்டத்தின் அளவு. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). 1A = 1CS-1.

• ஒரு கடத்தியில் மின்னோட்ட அடர்த்தி J என்பது ஓரலகு செங்குத்து பரப்பில் பாயும் மின்னோட்ட அளவு ஆகும்.(J=I/A)

• மின்னோட்டம் ஒரு ஸ்கேலர். ஆனால் மின்னோட்ட அடர்த்தி ஒரு வெக்டர் ஆகும்.

• ஓம் விதியின் நுண் வடிவம் 

• ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் V  I, அல்லது V = IR. இங்கு I என்பது மின்னோட்டம்; R என்பது மின்தடை.

• கடத்தியின் மின்தடை R = V/I. இதன் SI அலகு ஓம் () மற்றும் 1=1V/A.

• பொருளின் மின்தடை R = p l/A இங்கு l என்பது பொருளின் நீளம் மற்றும் A என்பது குறுக்குவெட்டுபரப்பு.

• பொருளின் மின்தடை எண் என்பது மின்னோட்டத்திற்கு அது தரும் மின்தடையின் மதிப்பை நிர்ணயிக்கிறது.

• பல மின்தடையாக்கிகள் (R1, R2, R3.........) தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை Rs = (R1 +R2 +R3.......)

• பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் (R1, R2, R3.........) இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடை 1/Rp= 1/R1 + 1/R2 + 1/R3 +............

• கிர்க்காஃப்பின் முதல் விதி (மின்னோட்ட விதி அல்லது சந்தி விதி): எந்த ஒரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழி ஆகும்.

• கிர்க்காஃப்பின் இரண்டாவது விதி (மின்னழுத்த வேறுபாட்டு விதி அல்லது சுற்று விதி): ஒரு மூடிய சுற்றின் எந்தவொரு பகுதியிலும் உள்ள மின்னோட்டம் மற்றும் மின்தடைகளின் பெருக்கற்பலன்களின் குறியியல் கூட்டுத்தொகையானது அந்த மூடிய மின் சுற்றிலுள்ள மின்னியக்கு விசைகளின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமமாகும்.

• மின்திறன் என்பது மின்னாற்றல் அளிக்கப்படும் வீதம் ஆகும்.

• V எனும் மின்னழுத்த வேறுபாட்டின் குறுக்கே பாயும் மின்னோட்டம் I எனில், மின்சுற்றுக்கு அளிக்கப்படும் திறன் P = IV.

• ஒரு மின் தடையில் (R) வெப்பமாக மாற்றப்படும் மின்திறன் P = I2R =V2/R.

• 1கிலோவாட்மணிக்குச் சமமான ஆற்றல் 1kWh = 3.6 x 106 J.

• மீட்டர் சமனச்சுற்று என்பது வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் இன்னொரு வடிவம் ஆகும்.

• மின்னழுத்தமானி, மின்னழுத்த வேறுபாட்டை ஒப்பிட பயன்படுகிறது.

• ஜுலின் வெப்ப விதி H = VIt (அல்லது) H = I2Rt.



Tags : Physics இயற்பியல்.
12th Physics : UNIT 2 : Current Electricity : Current Electricity: Summary Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : மின்னோட்டவியல்: பாடச்சுருக்கம் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்