Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | ஸ்கிரிப்டிங் மற்றும் நிரலாக்க மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடு
   Posted On :  18.08.2022 05:30 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

ஸ்கிரிப்டிங் மற்றும் நிரலாக்க மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடு

ஒரு scripting மொழி என்பது பிற நிரலாக்க மொழிகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும்.

Scripting மொழி

ஒரு scripting மொழி என்பது பிற நிரலாக்க மொழிகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும். ஜாவாஸ்கிரிப்ட், VBஸ்கிரிப்ட், PHP, பெர்ல், பைத்தான், ரூபி, ASP மற்றும் Tcl ஆகியவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Scripting மொழியாகும். பொதுவாக, ஒரு Scripting மொழி மற்ற நிரலாக்க மொழிகளுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால், பெரும்பாலும், அவை HTML, ஜாவா அல்லது C++ மொழிகளுடன் இணைந்து காணப்படுகின்றது.


1. ஸ்கிரிப்டிங் மற்றும் நிரலாக்க மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடு

Scripting மொழி மற்றும் நிரலாக்க மொழி கீழ்க்காணும் வரைப்படத்தைப் போன்று காணப்படும்.


அடிப்படையில், அனைத்து Scripting மொழிகளும் நிரலாக்க மொழிகளாகும். இரண்டுக்குமிடையே தத்துவார்த்தமான வேறுபாடு என்னவெனில், Scripting மொழிக்கு தொகுத்தல் படிநிலைத் தேவைப்படாது, மாறாக விளக்கம் தேவைப்படும்... உதாரணத்திற்கு, ஒரு C++ நிரல் இயக்குவதற்கும் முன்பாக , தொகுக்கப்பட வேண்டும். அதே சமயம் ஜாவாஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் போன்ற Scripting மொழிகள் தொகுக்கப்பட்ட தேவையில்லை. நிரலாக்க மொழிக்கு தொகுப்பான் / நிரல்பெயர்ப்பி தேவைப்படுவது போல Scripting மொழிக்கு வரி மொழி மாற்றித் தேவைப்படுகிறது. கொடுக்கப்பட்ட மொழி நிரலாக்க மொழியா அல்லது Scripting மொழியா என்பது அவை பயன்படுத்தப்படும் சூழலைப் பொறுத்தது.

12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python : Difference between Scripting and Programming Languages in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : ஸ்கிரிப்டிங் மற்றும் நிரலாக்க மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடு - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்