அலகு V
பாடம் 14
பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்
கற்றலின் நோக்கங்கள்
இந்த
பாடப்பகுதியை கற்றபின் மாணவர்கள் பின்வருவனவற்றை அறிந்து கொள்வார்கள்
•
உறை இடுதல் (wrapping) என்றால் என்ன என்பதை புரிந்துக் கொள்ளுதல். .
•
C++ செயற்கூறுகளையும் இனக்குழுக்களையும் பைத்தான் நிரல்களுக்குள் தருவித்து கொள்ளுதல்.
•
இருநிரலாக்க மொழிகளிலும் செயலாக்கவல்ல சூழலை உருவாக்குதல்.
• பைத்தான் நிரல்களை இயக்குதல் மற்றும் பிழைத்திருத்தம் செய்தல்.
அறிமுகம்
பைத்தான் மற்றும் C++ ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழியாகும். இருப்பினும்
பைத்தான் C++ மொழியைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது.
பைத்தான்
1. பொதுவாக, பைத்தான் ஒரு ‘வரி மொழி மாற்றி' மொழியாகும்.
2. பைத்தான் மாறும் தன்மைக் கொண்ட மொழியாகும்.
3. மாறியை அறிவிக்கும் போது, அது சார்ந்த தரவின வகையை குறிப்பிடத்
தேவையில்லை
4. இது Scripting மற்றும் பொதுப் பயன் மொழியென இருவகையிலும்
செயல்பட முடியும்.
C++
1. பொதுவாக C++ மொழி, ஒரு தொகுப்பு மொழியாகும்.
2. C++ நிலையான தன்மைக் கொண்ட தொகுக்கப்பட்ட மொழி.
3. மாறியை அறிவிக்கும் போது, தரவினத்தை குறிப்பிட வேண்டும்.
4. இது ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழியாகும்.
ஆயினும், இவ்விரு மொழிகளும் ஒன்றுக்-கொன்று சரியான வகையில் பொருந்திக்
கொள்ளும். பைத்தான் , பெரும்பாலும் scripting அல்லது "glue" மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, மேல் நிலையிலுள்ள நிரல் பெரும்பாலும் C அல்லது C++ மொழிகளில் எழுதப்பட்டுள்ள
செயல் முறைகளை அழைக்கும். இது தருக்க கருத்தை தற்போதைய குறிமுறையில் (எடுத்துக்காட்டாக
C++ மொழியில் எழுதப்பட்டுள்ள நிரல்) எழுதும்போது உதவிகரமாக இருக்கும். ஆனால், பைத்தான்
நிரலின் மூலம் அழைத்து, கையாளலாம்.