Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல்
   Posted On :  18.08.2022 05:37 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல்

பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்துக் கொள்ளுதலைப்பைத்தானில் C++ யை உறை இடுதல் என்கிறோம்.

பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல்

பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்துக் கொள்ளுதலைப்பைத்தானில் C++ யை உறை இடுதல் என்கிறோம். C++ நிரல்களுக்கான பைத்தான் இடைமுகங்களை அல்லது உறை இடுதலை பல வழிகளில் உருவாக்கலாம். பொதுவாக பயன்படுத்தப்படும் இடைமுகங்களாவன

• Python-C-API (API-Application Programming Interface C நிரல்களுடன் தொடர்பு கொள்ள)

• Ctypes (c நிரல்களுடன் தொடர்பு கொள்ள)

• SWIG (Simplified Wrapper Interface Generator- C மற்றும் C++ இரண்டு மொழிகளுக்கும்)

• Cython (C-நீட்டிப்புக்களை எழுதுவதற்கான ஒரு பைத்தான் போன்ற மொழியாகும்.)

• Boost. Python (Python மற்றும் C++ தொடர்பு கொள்வதற்கான கட்டமைப்பு)

• MinGW(விண்டோஸ்-க்கான குறைந்த பட்ச GNU )


1. MinGW இடைமுகம்

MinGW இயக்க நேர தலைப்புக் கோப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் வகையில், C , C++ மற்றும் FORTRAN நிரல் குறிமுறைகளைத் தொகுக்கவும், இணைக்கவும் இது பயன்படுகிறது.

MinGw-W64 (MinGW இன் பதிப்பு) windows இன் C++ க்கு சிறந்த தொகுப்பான் நிரல் பெயர்ப்பி ஆகும். C++ நிரல்களை தொகுத்து, இயக்க, விண்டோஸ் இயக்க முறைமைக்கு g++' தொகுப்பான் தேவை MinGW g++ஐ பயன்படுத்தி பைத்தான் நிரல் மூலம் C++ நிரல்களை தொகுத்து, இயக்க அனுமதிக்கிறது.

C++ நிரல் குறிமுறையைக் கொண்ட பைத்தான் நிரல்களை minGW-w64 project திட்டப்பணி (run முனையம்) மூலம் மட்டுமே இயக்க முடியும். பைத்தான் நிரல்கள் இயக்கப்பட வேண்டிய கட்டளை வரி சாளரத்தை run முனையம் திறந்து வைக்கும்.

g++ என்பது GCC- யை(GNU C தொகுப்பான்) அழைக்கும் நிரல்.இது தானாகவே தேவையான C++ நூலக கோப்புகளை இலக்கு நிரலுடன் இணைக்கிறது.

Refer installation of MinGW in Annexure -2


2. C++ நிரலை பைத்தான் மூலம் இயக்குதல்

1. MinGW run-ன் முனையத்தை இரட்டைக் கிளிக் செய்யவும்

2. பைத்தான் மென்பொருள் அமைந்திருக்கும் (python.exe) கோப்புறைக்கு செல்லவும். இந்த உதாரணத்தில்,பைத்தான் கோப்புறைC:\Program Files\OpenOffice4\Python என்ற அமைவிடத்தில் காணலாம்.

c:\> கோப்புறையிலிருந்து பைத்தான் அமைந்திருக்கும் கோப்புறைக்கு மாறுவதற்கான தொடரியல்

cd <absolute path>

இதில் "cd" கட்டளை change directory என்பதையும் absolute path என்பது பைத்தான் நிறுவப்பட்டிருக்கும் முழுமையான பாதையையும் குறிக்கும்.


இந்த எடுத்துக்காட்டில், பைத்தான் கோப்புறை அமைந்துள்ள இடத்திற்கு சென்று, பின்வரும் கட்டளையைத் தட்டச்சு செய்ய வேண்டும். "cd C:\>”. மேற்கண்ட சாளரத்தில் உயர்த்திக்காட்டிருப்பதைக் காண்க.

உதாரணத்திற்கு, Pali.cpp என்ற C++ நிரலை படிக்கும் pycpp.py என்றபைத்தான் நிரலை எடுத்துக் கொள்ளுங்கள். Pali.cpp என்ற நிரல் ஓர் எண்ணைப் பெற்றுக் கொண்டு, அது பாலிண்ட்ரோமா இல்லையா என்பதை வெளியிடும். உதாரணத்திற்கு, 232 என்ற எண்ணை உள்ளீடாக கொடுத்தால், palindrome என்ற வெளியீடு கிடைக்கும். C++ நிரல் pali நோட்பேடில் தட்டச்சு செய்யப்பட்டு, pali.cpp என்ற பெயரில் சேமிக்கப்படும். அதைப் போன்றே, pycpp.py என்று பைத்தான் நிரல் குறிமுறையும் நோட்பேடில் தட்டச்சு செய்யப்பட்டு, pycpp.py என்று சேமிக்கப்படுகிறது.

3. நம் நிரலை இயக்க, run முனையத்தை இரட்டை கிளிக் செய்யவும். பாதையை பைத்தான் கோப்புறை அமைவிடத்திற்கும் மாற்றவும். பைத்தானை இயக்குவதற்கான தொடரியல்,

Python <filename.py> -i <C++ filename without cpp extension>


உதாரணத்திற்கு, கட்டளை தூண்டுக்குறியில், “Python pycpp.py -i pali” என்று உள்ளிட்டு enter விசையை அழுத்தவும். தொகுத்தல் வெற்றிகரமாக முடிந்தால் நீங்கள் எதிர்பார்த்த வெளியீடு கிடைக்கும் இல்லையேல் பிழைச் செய்தி வெளியிடப்படும்.

குறிப்பு 

இயங்கு (execution) கட்டளையில், உள்ளீட்டு கோப்பிற்கு நீட்டிப்பு தேவைப்படாது. உதாரணத்திற்கு, “pali.cpp” என்பதற்கு பதிலாக "pali” என்றபெயரைக்கொடுத்தால் போதுமானது.

நாம் pycpp.py மற்றும் pali.cpp என்ற எடுத்துக்காட்டுகள் மூலம் நிரலை இயக்குதல் பற்றி பார்ப்போம். இந்த இரு நிரல்களும் c:\pyprg என்ற கோப்புறையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிரல்கள் பைத்தானில் "exe file” அமைந்திருக்கும் அதே கோப்புறையில் இல்லாவிடில், இயக்க நேரத்தின் போது கோப்புகளின் முழுமையான பாதையைக் குறிப்பிடுதல் அவசியம். வெளியீடு கீழ்க்கண்டவாறு இருக்கும்.


குறிப்பு 

கட்டளை சாளரத்தில் உள்ள திரையை அழிக்க (clear)செய்ய cls கட்டளையைப்பயன்படுத்தவும்.

நாம் இப்பொழுது C++ நிரல் குறிமுறையைத் தொகுப்பதற்கான பைத்தான் நிரலை எவ்வாறு எழுதுவது என்பதைப் பார்ப்போம். 

12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python : Importing C++ Files in Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்