பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் - நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python

   Posted On :  18.08.2022 09:09 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

நினைவில் கொள்க

C++ ஒரு தொகுப்பு மொழி மாற்றி மொழி, பைத்தான் என்பது வரி மொழி மாற்றி மொழியாகும்.

நினைவில் கொள்க

• C++ ஒரு தொகுப்பு மொழி மாற்றி மொழி, பைத்தான் என்பது வரி மொழி மாற்றி மொழியாகும்.

• C++நிலையான தன்மைக் கொண்ட தொகுக்கப்பட்ட மொழி, ஆனால் பைத்தான் என்பது மாறும் தன்மை கொண்ட மொழி.

• C++போன்ற நிலையான வகையை சார்ந்த மொழியில் நிரலர் கணிப்பொறிக்கு ஒவ்வொரு தரவு மதிப்பும் பயன்படுத்தக்கூடிய தரவின வகையை வெளிப்படையாக தெரிவித்தல் அவசியமாகிறது.

• பைத்தான் போன்று மாறும் நிலைக் கொண்ட மொழிக்கு தரவு மதிப்பிற்கான தரவு வகையை வெளிப்படையாக கொடுக்கப்பட்ட வேண்டிய தேவையில்லை.

• பைத்தான் தரவு மதிப்பின் அடிப்படையில் மாறியை கையாள்கிறது.

•ஒரு Scripting மொழி என்பது பிற நிரலாக்க மொழிகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும்.

• MinGW இயக்க நேர தலைப்புக் கோப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் வகையில் C, C++ மற்றும்  FORTRAN நிரல்குறிமுறைகளை தொகுக்கவும், தொடர்புறுத்தவும் இது பயன்படுகிறது.

• (.) புள்ளி செயற்குறி தருவிக்கப்பட்ட கூறுநிலையின் செயற்கூறுகளை அணுகுவதற்கு பயன்படுகிறது.

• sys கூறுநிலை வரிமொழி மாற்றியால் பயன்படுத்தப்படும் மாறிகளுக்கும், வரிமொழி மாற்றியுடன் வலுவாக ஊடாடும் செயற்கூறுகளுக்கும் அணுகுதலை வழங்குகிறது.

• பைத்தானில் OS கூறுநிலை இயக்க அமைப்பின் சார்பு நிலை செயல்பாட்டுடன் பயன்படுத்த வழிவகை வழங்குகிறது.

• பைத்தானில் getopt கூறுநிலை கட்டளைவரி தேர்வுகளையும் செயலுருபுகளையும் பிரித்தெடுக்க உதவுகிறது.

Tags : Importing C++ Programs In Python பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்.
12th Computer Science : Chapter 14 : Integrating Python with MySql and C++ : Importing C++ Programs In Python : Points to remember Importing C++ Programs In Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : நினைவில் கொள்க - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்