இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - சட்டமன்றத்தின் அதிகாரப் பகிர்வு | 12th Political Science : Chapter 2 : Legislature
சட்டமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்
இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில், மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன.
1. ஒன்றியப் பட்டியல்
2. மாநிலப் பட்டியல்
3. பொதுப் பட்டியல்
ஒன்றியப் பட்டியலில் அடங்கியுள்ள துறைகள் மீது சட்டங்களை இயற்றுவதற்கும், நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றுவதற்கும் பிரத்யேகமான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது. மாநிலப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது பிரத்யேகமான அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்திடம் உள்ளது. பொதுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே முரண்பாடுகளின் போது மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கும். இந்த பட்டியலில் குறிப்பிடப்படாத எஞ்சியுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளது.
செயல்பாடு - விவாதம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பான சலுகைகளும் ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களின் செயல்திறன் குறைவாகவே உள்ளது: குடிமக்கள் அறிக்கை
❖ மக்களவையில் 2010-12 ஆம் ஆண்டுகளில் 227 கூட்டத்தொடர்கள் 852 மணித்துளிகள் அலுவல் பணிகள் நடந்துள்ளது. அதாவது, ஒரு நாளுக்கு நான்கு மணி நேரத்துக்கும் குறைவாக.
❖ 2013 இல் ஆளுகை மற்றும் வளர்ச்சி பற்றிய அறிக்கையை தேசிய சமூக கண்காணிப்பும் எனும் அமைப்பு வெளியிட்டது. அதில் உலகில் அதிக ஊதியம் மற்றும் சலுகைகள் பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உண்டு. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களது பணி பின்தங்கியே உள்ளது என்கிறது.
❖ சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளைவிட அதிகமாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பக்கத்து நாடான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைவிட நான்கரை மடங்கு அதிகமாகும். இது நம் நாட்டின் தனிநபர் வருமானத்தை போல் 68 மடங்கு உள்ளது.