இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 2 : Legislature

   Posted On :  02.04.2022 01:41 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்

அருஞ்சொற்பொருள்

அரசியல் அறிவியல் : இந்திய அரசமைப்பு

அருஞ்சொற்பொருள்



ஓரவை: ஒரு சட்டப்பேரவையை மட்டுமே மக்களவையாக கொண்டுள்ள தேசிய சட்டமன்றம் ஓரவை என்று அழைக்கப்படும். 


ஈரவை: சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை கொண்டுள்ள சட்டமன்ற அமைப்பு ஈரவை முறை என்று அழைக்கப்படும்.


உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை: மக்களவை மாநிலங்களவைக் கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்.


சட்டமுன்வரைவு: ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் "சட்ட முன் வரைவு வாக " முன்மொழியப்படுகின்றது. அந்த சட்ட முன்வரைவவை அரசமைப்புக் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


திருத்தச்சட்டம்:

இந்திய அரசமைப்புக்கோட்பாட்டின் அடிப்படை கோட்பாட்டை மாற்றாமல் மாறும் நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு சமகாலத்திற்கு ஏற்ப தனித்துவத்தை இந்திய அரசியமைப்பு கொண்டுள்ளது. நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது சட்டத் திருத்தம் ஆகும்.


கண்டன தீர்மானம்: குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான வழி முறையே கண்டன தீர்மானம் ஆகும்.

 

கேள்வி நேரம்: ஒவ்வொரு நாளும் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒதுக்கப்படுகிறது.


உறுப்பினர்களுக்கான விலக்களிப்புகள்: அவையின் எல்லைக்குள் கைதுக்கு எதிரான பாதுகாப்பு


கூட்டுக் கூட்டத்தொடர்: சிறப்பு நிகழ்வுகள் அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டுவதையே கூட்டுக் கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம்.


கூட்டத்தொடர்: சட்டமுன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், தீர்மானங்கள் ஆகியவை போன்ற பல்வேறு செயல்குறிப்புக்கள் குறித்து விவாதம் நடத்துவதற்காக, திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம்.


நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் / முதலமைச்சர் அரசாங்கத்திற்கு தலைமைத் தாங்குவதற்காக மக்களவை / சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை

பெருவதற்கான வழிமுறையாகும். ஒருவேளை அந்த தீர்மானம் வெற்றி பெற்றால், மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும்.


Tags : India Legislature | Political Science இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 2 : Legislature : Glossary India Legislature | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம் : அருஞ்சொற்பொருள் - இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்