தனிப் பிழை, சராசரி தனிப் பிழை, ஒப்பீட்டுப் பிழை, விழுக்காட்டுப் பிழை | பிழைகளின் கோட்பாடு | இயற்பியல் - பிழை பகுப்பாய்வு | 11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement
பிழை பகுப்பாய்வு
(i) தனிப் பிழை (Absolute error)
ஓர் அளவின் உண்மையான மதிப்பிற்கும் அளவிடப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாட்டின் எண்மதிப்பே தனிப் பிழை எனப்படும். n முறை சோதனை நிகழ்த்தப்பட்ட 'a' என்ற ஒரு அளவின் அளவிடப்பட்ட மதிப்புகள் a1, a2, a3, ………. an எனில் அவற்றின் கூட்டுச் சராசரி மதிப்பே அந்த அளவின் உண்மையான மதிப்பு (am) என அழைக்கப்படுகிறது.
அளவிடப்பட்ட மதிப்புகளின் தனிப் பிழைகள்
(ii) சராசரி தனிப் பிழை (Mean Absoulte error)
சராசரி தனிப் பிழை என்பது அனைத்து அளவுகளின் தனிப் பிழைகளின் எண் மதிப்புக்களின் கூட்டுச் சராசரி ஆகும்.
am என்பது உண்மையான மதிப்பு, ∆am என்பது சராசரி தனிப் பிழை எனில், அளவுகளின் எண் மதிப்புகள் (am + ∆am) மற்றும் (am - ∆am) இடையில் இருக்கும்.
(iii) ஒப்பீட்டுப் பிழை (Relative error)
சராசரி தனிப்பிழைக்கும், சராசரி மதிப்பிற்கும் (உண்மை மதிப்பிற்கும்) இடையேயான தகவு ஒப்பீட்டுப் பிழை எனப்படும். இது பின்னப் பிழை அல்லது சார்புப் பிழை எனவும் அழைக்கப்படுகிறது.
அளவிடப்பட்ட பொருளின் மொத்த பரிமாணத்துடன் ஒப்பிடும் போது தனிப் பிழை எவ்வளவு பெரியது என்பதை விவரிப்பதே ஒப்பீட்டுப் பிழையாகும்.
எடுத்துக்காட்டாக, ஒரு கார் 62 km h-1 வேகத்தில் செல்லும்போது, வேகமானி காட்டும் அளவு 60 km h-1 இங்கு தனிப்பிழை 62-60 = 2 km h-1 ஆகும். ஒப்பீட்டு பிழை = 2/60 = 0.033.
(iv) விழுக்காட்டுப் பிழை (Percentage error)
ஒப்பீட்டுப் பிழையினை விழுக்காட்டில் குறிப்பிட்டால், அது விழுக்காட்டுப் பிழை எனப்படும்.
விழுக்காட்டுப் பிழை சுழிக்கு மிக அருகில் இருந்தால், அந்த அளவீடு உண்மையான அளவிற்கு மிக அருகில் எடுக்கப்பட்ட அளவீடாகும். இது சரியானதும், ஏற்றுக் கொள்ளக்கூடியதும் ஆகும். இப்பிழைகள் துல்லியமற்ற கருவியினால் ஏற்படுகிறதா அல்லது தவறான பரிசோதனை முறைகளால் ஏற்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
எடுத்துக்காட்டு 1.4
ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56s, 2.42 s, 2.71 s மற்றும் 280 s. எனில்
i. அலைவு நேரத்தின் சராசரி மதிப்பு
ii. ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை
iii. சராசரி தனிப் பிழை
iv. ஒப்பீட்டுப் பிழை
v. விழுக்காட்டுப் பிழை ஆகியவற்றைக் கணக்கிடுக. முடிவுகளை முறையான வடிவில் தருக.
தீர்வு