இயற்பியல் - முக்கிய எண்ணுருவின் விதிகளுக்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | 11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement
எடுத்துக்காட்டு 1.10
கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
(i) 600800
(ii) 400
(iii) 0.007
(iv) 5213.0
(v) 2.65 × 1024m
(vi) 0.0006032
விடைகள்:
(i) நான்கு
(ii) ஒன்று
(iii) ஒன்று
(iv) ஐந்து
(v) மூன்று
(vi) நான்கு
முழுமைப் படுத்துதல் (Rounding off)
எடுத்துக்காட்டு 1.11
கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக.
i) 18.35 ஐ 3 இலக்கம் வரை
ii) 19.45 ஐ 3 இலக்கம் வரை
iii) 101.55 × 10 ஐ 4 இலக்கம் வரை
iv) 248337 ஐ 3 இலக்கம் வரை
v) 12.653 ஐ 3 இலக்கம் வரை
விடைகள்:
i) 18.4
ii) 19.4
iii) 101.6 × 106
iv) 248000
v) 12.7
(i) கூட்டல் மற்றும் கழித்தல்
கூட்டல் மற்றும் கழித்தலின் போது, இறுதி முடிவில் அதிக இலக்கங்கள் வரும்பொழுது அந்த எண்களில் மிகக்குறைந்த தசம இலக்கம் உள்ள எண்களின் இலக்கத்திற்கு முழுமைப்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு
1. 3.1 + 1.780 + 2.046 = 6.926
இங்கு முக்கிய எண்ணுருவின் தசம் புள்ளிக்கு பின்வரும் குறைந்த இலக்க எண்ணிக்கை 1. எனவே முடிவானது 6.9 ஆக முழுமைப்படுத்தப்படுகிறது.
2. 12.637 - 2.42 = 10.217
இங்கு முக்கிய எண்ணுருவின் தசம் புள்ளிக்கு பின்வரும் குறைந்த இலக்க எண்ணிக்கை 2. எனவே முடிவானது 10.22 ஆக முழுமைப்படுத்தப்படுகிறது.
(ii) பெருக்கல் மற்றும் வகுத்தல்
எண்களின் பெருக்கல் அல்லது வகுத்தலின் போது இறுதி முடிவின் முக்கிய எண்ணுருக்கள், அந்த எண்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள எண்களின் முக்கிய எண்ணுருவிற்கு முழுமைப்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு
1. 1.21 × 36.72 = 44.4312 = 44.4
அளவிட்ட அளவின் மிகக்குறைந்த முக்கிய எண்ணுரு மதிப்பு 3. எனவே முடிவானது 44.4 என்ற மூன்று முக்கிய எண்ணுருக்களாக முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
2. 36.72 = 1.2 = 30.6 = 31
அளவிடப்பட்ட அளவின் மிகக்குறைந்த முக்கிய எண்ணுரு மதிப்பு 2. எனவே முடிவானது 31 என்ற இரண்டு முக்கிய எண்ணுருக்களாக முழுமைப்படுத்தப்படுகிறது.