தயாரித்தல், இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள், பயன்கள் - எத்தனாயிக் அமிலம் | 10th Science : Chapter 11 : Carbon and its Compounds
எத்தனாயிக்
அமிலம் (CH3COOH)
எத்தனாயிக் அமிலம் அல்லது
அசிட்டிக் அமிலம் என்பது கார்பாக்சிலிக் அமில தொகுதியில் முக்கியத்துவமான ஒன்று.
இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2
இதன் அமைப்பு வாய்ப்பாடு
1. எத்தனாயிக்
அமிலம் தயாரித்தல்
எத்தனாலை காரங்கலந்த பொட்டாசியம்
பெர்மாங்கனேட் அல்லது அமிலம் கலந்த பொட்டாசியம் - டை - குரோமேட் கரைசலை கொண்டு
ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்.
2. இயற்பியல்
பண்புகள்
• எத்தனாயிக் அமிலம் நிறமற்ற, விரும்பதகாத
மணமுள்ள ஒரு நீர்மம்.
• இது புளிப்பு சுவையுடையது.
• இது நீருடன் எல்லா விதத்திலும்
கலக்கிறது.
• இதன் கொதிநிலை (391 K). இதனை ஒத்த
ஆல்கஹால், ஆல்டிஹைடுகள், கீட்டோனின்
கொதிநிலையை விட அதிகம்.
• குளிர வைக்கும் போது தூய
எத்தனாயிக் அமிலம் பனிக்கட்டி போன்ற படிகங்களை உருவாக்குகிறது. எனவே இது (கிளேசியல்)
தூய அசிட்டிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது.
3. வேதிப் பண்புகள்
1. உலோகத்துடன்
வினை:
எத்தனாயிக் அமிலமானது Na,
K, Zn முதலிய உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு
அதனுடைய எத்தனோயோட்டுகளை தருகிறது.
2CH3COOH + Zn → (CH3COO)2 Zn + H2 ↑
2CH3COOH + 2Na → 2CH3COONa + H2 ↑
2. சோடியம்
கார்பனேட்டுடனும், சோடியம் பை கார்பனேட்டுடனும் வினை : எத்தனாயிக் அமிலம், வீரியம் குறைந்த
காரமான சோடியம் கார்பனேட்டுடனும், சோடியம் பை
கார்பனேட்டுடனும் வினை புரிந்து நுரைத்து பொங்குதல் மூலம் கார்பன்டை ஆக்சைடு
வாயுவை வெளியேற்றுகிறது.
2CH3COOH + Na2CO3 →
2CH3COONa + CO2↑ + H2O
CH3COOH + NaHCO3 → CH3COONa
+ CO2↑ + H2O
3. காரத்துடன் வினை: எத்தனாயிக் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடுடன்
வினைபுரிந்து சோடியம் எத்தனோயேட்டையும், நீரையும் தருகிறது.
CH3COOH + NaOH → CH3COONa +
H2O
4. கார்பாக்ஸில்
நீக்கம் (CO2 நீக்கம்): எத்தனாயிக் அமிலத்தின் சோடியம்
உப்பைச் சோடா சுண்ணாம்புடன் (3 பகுதி NaOH மற்றும் 1 பகுதி CaO
திடக்கலவை) சேர்த்துச் சூடுபடுத்தும் போது மீத்தேன் வாயு
உருவாகிறது.
CH3COONa → NaOH / CaO →
CH4 ↑ + Na2CO3
4. பயன்கள்
நீர்த்த அசிட்டிக் அமிலமானது
(வினிகர்) உணவு சேர்க்கையாகவும்,
சுவையூட்டியாகவும் மற்றும் உணவு பதப்படுத்தியாகவும் பயன்படுகிறது.
• நெகிழி தயாரிப்பில்
பயன்படுகிறது.
• சாயங்கள், நிறங்கள் மற்றும்
வண்ணப் பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
• துணிகளில் அச்சுப் பதிக்க
பயன்படுகிறது.
• ஆய்வக கரணியாக பயன்படுகிறது.
• இரப்பர் பாலைக் கெட்டிப்படுத்த
பயன்படுகிறது.
• வாசனைப் பொருட்கள் மற்றும்
மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.