Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

கார்பனும் அதன் சேர்மங்களும் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 11 : Carbon and its Compounds

   Posted On :  30.07.2022 05:42 pm

10வது அறிவியல் : அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்

நினைவில் கொள்க

படி வரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும், ஒத்த வேதி பண்புகளையும் கொண்ட கரிம சேர்மங்களை குறிப்பதாகும்.

கார்பனும் அதன் சேர்மங்களும்

நினைவில் கொள்க

· படி வரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும், ஒத்த வேதி பண்புகளையும் கொண்ட கரிம சேர்மங்களை குறிப்பதாகும்.

· IUPAC பெயரானது மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. அவையானவன, அடிப்படை சொல், முன்னொட்டு மற்றும் பின்னொட்டு

· ஒரு சேர்மத்தின் வேதிப் பண்புகளுக்கு காரணமான ஒரு அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதியே அச்சேர்மத்தின் வினை செயல் தொகுதி ஆகும்.

· எத்தனாயிக் அமிலம் பொதுவாக அசிட்டிக் அமிலம் என்று குறிப்பிடப்படுகிறது. இது கார்பாசிலிக் அமிலம் தொகுதியை சார்ந்தது.

· எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் அல்லது எளிய ஆல்கஹால் என்பது ஆல்கஹால் குடும்பத்தைச் சார்ந்த முக்கியமான உறுப்பாகும்.

· நொதிகளின் மூலமாக சிக்கலான கரிம சேர்மங்களில், மெதுவாக வேதிவினை நிகழ்ந்து எளிய மூலக்கூறுகள் உருவாதலே நொதித்தல் எனப்படும்.

· நீளச்சங்கிலி அமைப்பை உடைய கார்பாக்சிலிக் அமிலங்களின் (கொழுப்பு அமிலங்கள்) சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளே சோப்புக்கள் ஆகும்.

· டிடர்ஜெண்ட் என்பவை சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும். இதில் சோப்பில் உள்ள -COOH தொகுதிக்கு பதிலாக – SO3H தொகுதி உள்ளது.




 

Tags : Carbon and its Compounds கார்பனும் அதன் சேர்மங்களும்.
10th Science : Chapter 11 : Carbon and its Compounds : Points to Remember Carbon and its Compounds in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும் : நினைவில் கொள்க - கார்பனும் அதன் சேர்மங்களும் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்