கரிமச் சேர்மங்களின் பொதுப் பண்புகள்
இந்த
உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் சில தனித்துவமான பண்புகள் இருப்பது போல கரிமச்
சேர்மங்களுக்கும் சில பொதுப் பண்புகள் இருக்கின்றன. அவைகளில் சில கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
· கரிமச்
சேர்மங்கள் சிக்கலான அமைப்பையும், அதிக
மூலக்கூறு நிறையையும் கொண்டுள்ளன.
· கரிமச்
சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையாது. ஆனால் ஈதர், கார்பன்
டெட்ராகுளோரைடு, டொலுவின் போன்ற கரிமக் கரைப்பான்களில்
கரையும்.
· கரிமச்
சேர்மங்கள் எளிதில் எரியக் கூடிய தன்மை உடையவை.
· கரிமச்
சேர்மங்களை கனிமச் சேர்மங்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவே வினை புரிகின்றன. இதனால்
அவற்றின் வினை வேகமும் குறைவாகவே இருக்கிறது.
· பெரும்பாலான
கரிமச் சேர்மங்கள் இயற்கையாகவே சகப் பிணைப்பைக் கொண்டுள்ளன.
· கரிமச்
சேர்மங்கள் கனிமச் சேர்மங்களைவிட குறைவான உருகுநிலையும் கொதிநிலையையும்
கொண்டுள்ளன.
· கரிமச்
சேர்மங்கள் மாற்றியப்பண்பை பெற்றுள்ளன. அதாவது ஒரே மூலக்வறு வாய்ப்பாட்டை
பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் அதனுடைய இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில்
மாறுகின்றன.
· இவை
எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.
· பல்வேறு
கரிமச் சேர்மங்களை ஆய்வகத்தில் தயாரிக்கலாம்.