கார்பனும் அதன் சேர்மங்களும் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 11 : Carbon and its Compounds
கார்பனும் அதன் சேர்மங்களும்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. ஒரு திறந்த சங்கிலித்தொடர் கரிம சேர்மத்தின்
மூலக்கூறு வாய்பாடு
அ) அல்கேன்
ஆ) அல்கீன்
இ) அல்கைன்
ஈ) ஆல்கஹால்
2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன் -1-ஆல் இது எந்த வகைச் சேர்மம்?
அ) ஆல்டிஹைடு
ஆ) கார்பாசிலிக் அமிலம்
இ) கீட்டோன்
ஈ) ஆல்கஹால்
3. IUPAC பெயரிடுதலின் படி அல்டிஹைடுக்காக
சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு
அ) ஆல்
ஆ) ஆயிக் அமிலம்
இ) ஏல்
ஈ) அல்
4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில் தொடர்ச்சியாக
வரும் இணை எது?
அ) C3H8
மற்றும் C4H10
ஆ) C2H2 மற்றும் C2H4
இ) CH4 மற்றும்
C3H6
ஈ) C2H5OH மற்றும் C4H8OH
5. C2H5OH + 3O2 → 2CO2 + 3H2O
என்பது
அ) எத்தனால் ஒடுக்கம்
ஆ) எத்தனால் எரிதல்
இ) எத்தனாயிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றம்
ஈ) எத்தனேல் ஆக்ஸிஜனேற்றம்
6. எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல் இதிலுள்ள
எத்தனாலின் சதவீதம்
அ) 95.5%
ஆ) 75.5%
இ) 55.5%
ஈ) 45.5%
7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
அ) கார்பாக்சிலிக் அமிலம்
ஆ) ஈதர்
இ) எஸ்டர்
ஈ) ஆல்டிஹைடு
8. TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப் பொருளைக்
குறிக்கிறது?
அ) தாது உப்பு
ஆ) வைட்டமின்
இ) கொழுப்பு அமிலம்
ஈ) கார்போஹைட்ரேட்
9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான
கூற்று எது?
அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு
அமிலத்தின் சோடிய உப்பு
ஆ) அல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இ) டிடர்ஜெண்டின் அயனி பகுதி SO3-
Na+
ஈ) கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது
அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் வினைச்செயல்
தொகுதி ஆகும்.
2. அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு CnH2n-2
3. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை
குறிப்பிடுவது அடிப்படைச்சொல்
(அடிப்படைச்சொல் / பின்னொட்டு / முன்னொட்டு)
4. (நிறைவுற்ற / நிறைவுறா) நிறைவுறா சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.
5. அடர் சல்பியூரிக் அமிலத்தை கொண்டு எத்தனாலை நீர்
நீக்கம் செய்யும் போது ஈத்தீன் (ஈத்தீன் / ஈத்தேன்)
கிடைக்கிறது.
6, 100% தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் என்று அழைக்கப்படுகிறது.
7. எத்தனாயிக் அமிலம் நீல லிட்டரில் தாளை சிவப்பு ஆக மாற்றுகிறது.
8. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்ட நீராற்பகுத்தல்
சோப்பாக்கல் வினை எனப்படும்.
9. உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் நேரான (கிளை / நேரான)
சங்கிலி தொடரினை உடையவை.
III. பொருத்துக:
1. வினைச் செயல் தொகுதி – OH : பென்சீன்
2. பல்லின வளைய சேர்மங்கள் : பொட்டாசியம் ஸ்டிரேட்
3. நிறைவுறா சேர்மங்கள் : ஆல்கஹால்
4. சோப்பு : பியூரான்
5. கார்போ வளையச் சேர்மங்கள் : ஈத்தீன்
விடை:
1. வினைச் செயல் தொகுதி – OH : ஈத்தீன்
2. பல்லின வளைய சேர்மங்கள் : பியூரான்
3. நிறைவுறா சேர்மங்கள் : பென்சீன்
4. சோப்பு : பொட்டாசியம் ஸ்டிரேட்
5. கார்போ வளையச் சேர்மங்கள் : ஆல்கஹால்
IV. பின்வரும் வினாக்களில் கூற்றும்
அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருனவற்றுள் எது சரியான தெரிவோ
அதனைத் தெரிவு செய்க.
அ) ‘A’
- மற்றும் ‘R'- சரி, R, A-ஐ விளக்குகிறது.
ஆ) 'A' சரி
‘R'- தவறு
இ) 'A' தவறு
'R'- சரி
ஈ) ‘A' மற்றும்
‘R'- சரி R, ‘A' க்கான
சரியான விளக்கம் அல்ல
1. கூற்று A : கடின நீரில்
சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல்புரிகின்றன.
காரணம் R : டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.
விடை: அ) 'A'- மற்றும் 'R'- சரி,
R, A-ஐ விளக்குகிறது.
2. கூற்று
A : அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்
காரணம் R : ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பை பெற்றுள்ளன.
விடை: ஈ) ‘A' மற்றும் ‘R'- சரி R,
‘A' க்கான சரியான விளக்கம் அல்ல
V. சிறுவினாக்கள்:
1. எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்பாட்டையும்
எழுதுக.
புரப்பனோன் – CH3COCH3
2. கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப்
பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாட்டை எழுதுக.
i) புரப்பேன்
ii) பென்சீன்
iii) வளைய பியூட்டேன்
iv) பியூரான்
i) புரப்பேன்: நிறைவுற்ற ஹைட்ரோ கார்பனில் திறந்த அமைப்புடைய சேர்மம்
CH3-CH2-CH3
ii) பென்சீன் : நிறைவுறா வளையச் சேர்மத்தில் அரோமேட்டிக் சேர்மம்
iii) வளைய பியூட்டேன் : நிறைவுற்ற ஹைட்ரோ கார்பனின் வளைய
பியூட்டேன்
iv) பியூரான் : நிறைவுறா ஹைட்ரோ கார்பனில், பல்லின வளையச் சேர்மம்
3. எத்தனாலிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது? அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
எத்தனாலை காரங்கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) அமிலம் கலந்த
பொட்டாசியம்-டை-குரோமேட் கரைசலை கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக்
அமிலத்தை தயாரிக்கலாம்.
CH3CH2OH [எத்தனால்] → KMnO4/OH- 2[O] → CH3COOH [எத்தனாயிக் அமிலம்] + H2O
4. டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுப்படுத்துகின்றன
இம்மாசுபாட்டினை தவிர்க்கும் வழிமுறை யாது?
சில டிடர்ஜெண்ட்கள் மிகுந்த கிளைகளை உடைய ஹைட்ரோகார்பன் சங்கிலி
தொடரை கொண்டுள்ளது. இவை நுண்ணுயிரிகளை எளிதாய் சிதைக்க இயலாது. எனவே நீரில் கரையாத
உப்புகளாய் நீரில் படிந்து நீரை மாசுபடுத்துகிறது.
இவற்றை தவிர்க்க, உயிரிய சிதைவு
டிடர்ஜெண்ட்களை பயன்படுத்தலாம். பொதுவாக இவை நேரான ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரை
பெற்றவை.
5. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.
சோப்பு
அ) இது நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கார்பாசிலிக் அமிலங்களின் சோடிய
உப்புகள்
ஆ) சோடியம் அயனி பகுதி COO-Na+
இ) விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பு மற்றும் தாவரங்களிடம்
இருந்து கிடைக்கும் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
ஈ) உயிரிய சிதைவு அடையும் தன்மை பெற்றது
உ) கடின நீரில் பயன்படுத்த முடியாது.
ஊ) கடின நீருடன் சேரும் போது (ஸ்கம்) படிவுகளை உருவாக்கும்.
எ) குறைவான அளவில் நுரைகளை உருவாக்கும்.
ஏ) உயிரிய சிதைவு அடையும் தன்மை பெற்றது
டிடர்ஜெண்ட்
அ) இது சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்புகள்
ஆ) டிடர்ஜெண்டின் அயனி பகுதி SO-3Na+
இ) பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பனிலிருந்து இவை
தயாரிக்கப்படுகிறது.
ஈ) உயிரிய சிதைவு அடையும் தன்மை அற்றது
உ) கடின நீரிலும் சிறப்பாக சலவை செய்யலாம்
ஊ) கடின நீருடன் சேரும்போது (ஸ்கம்) படிவுகளை உருவாக்காது.
எ) அதிகளவில் நுரைகளை உருவாக்கும்.
ஏ) உயிரிய சிதைவு அடையும் தன்மை அற்றது.
VI. தவறை சுட்டிக்காட்டி திருத்துதல் :
1. கார்பன் மற்ற கார்பன்களுடன் சேர்ந்து சங்கிலித்
தொடர் சகப்பிணைப்பை உருவாக்கும் தன்மை மாற்றிய பண்பு எனப்படுகிறது.
விடை: தவறு
கார்பன் மற்ற கார்பன்களுடன் சேர்ந்து சங்கிலித் தொடர் சகப்பிணைப்பை
உருவாக்கும் தன்மை தன் சகப்பிணைப்பு உருவாதல் எனப்படுகிறது.
2. கார்பன் சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையும்.
விடை: தவறு
கார்பன் சேர்மங்கள் பொதுவாக கரிம கரைப்பான்களில் கரையும்.
3. படிவரிசை சேர்மங்களின் இயற்பியல் பண்புகள்
ஒத்திருக்கின்றன.
விடை: தவறு
படிவரிசை சேர்மங்களின் வேதிப்பண்புகள் ஒத்திருக்கின்றன.
4. கழிவுப்பாகில் 10% சுக்ரோஸ்
உள்ளது
விடை: தவறு
கழிவுப்பாகில் 30% சுக்ரோஸ் உள்ளது.
5. நீர்த்த எத்தனால் சுவையூட்டியாக பயன்படுகிறது.
விடை: தவறு
நீர்த்த எத்தனாயிக் அமிலம் சுவையூட்டியாக பயன்படுகிறது.
VII. நெடு வினாக்கள் :
1. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை
சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.
விடை:
படிவரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும் ஒத்த வேதி பண்புகளையும்
கொண்ட ஒரே தொகுதி (அ) ஒரே வகையில் உள்ள கரிமச் சேர்மங்களையும் குறிப்பதாகும்.
படிவரிசை சேர்மங்களின் பண்புகள்:
• ஒரு படிவரிசையில் உள்ள
அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்தலீன் CH2 என்ற பொது வேறுபாட்டிலும்
மூலக்கூறு நிறை 14 amu வேறுபடுகின்றன.
• (ஒரு படிவரிசையில் உள்ள அனைத்து
சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும் வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
• எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில்
தயாரிக்க இயலும்.
2. CH3-CH2-CH2OH என்ற
சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.
விடை:
CH3-CH2-CH2OH
படி 1 : இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர் எனவே அடிப்படைச்
சொல் ‘புரப்' ஆகும்.
படி 2 : கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை
பிணைப்புகளாக இருப்பதால் 'யேன்' என்ற முதன்மை
பின்னொட்டை சேர்க்க வேண்டும்.
படி 3 : கார்பன் சங்கிலித் தொடரில் -OH தொகுதி
இருப்பதால் இது ஒரு ஆல்கஹால் எனவே தொகுதி -OH அண்மையில் அமையும்
விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலை தொடங்க வேண்டும்.
3 2 1
CH3 - CH2 - CH2 - OH
படி 4 : OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம்
நிலை பின்னொட்டாக ‘1-ஆல்' சேர்க்க வேண்டும்.
எனவே சேர்மத்தின் பெயர்
புரப் + யேன் + 1 ஆல் → புரப்பேன் - 1 - ஆல்
3. கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
விடை:
கரும்பு சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிமமாக்கும் பொழுது மீதமுள்ள
ஆழந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவமாகும். இதில் படிமமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாத
30% சுக்ரோஸ் உள்ளது. இது கழிவுபாகு எனப்படுகிறது.
i) கழிவுப்பாகினை நீர்த்தல் :
கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.
ii) அம்மோனியம் உப்புகள் சேர்த்தல்:
நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்குத் தேவையான நைட்ரஜன் கழிவுப்பாகில் உள்ளது.
குறைவாக இருப்பின் அம்மோனியம் சல்பேட் (அ) அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உர
மூட்டப்படுகிறது.
iii) ஈஸ்ட் சேர்த்தல்:
படி ii ல் கிடைக்கும் கரைசலை பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரித்து பின் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இக்கலவை 303k வெப்பநிலையில் சில நாட்களுக்கு வைக்கப்படுகிறது. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ் மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.
நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் எனப்படுகிறது.
iv) கழிவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல் :
15 முதல் 18% வரை ஆல்கஹாலும்
மீதம் நீராகவும் உள்ள நொதித்த நீர்மத்தை பின்ன காய்ச்சி வடித்தல் மூலம் 95.5% எத்தனாலும் 4.5% நீரும் கிடைக்கிறது. இது
எரிசாராயம் என அழைக்கப்படுகிறது. இதனை 5 லிருந்து 6 மணி நேரம் வரை சுட்ட சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம் வைக்கும் போது தூய ஆல்கஹால் கிடைக்கிறது. இது தனி ஆல்கஹால்
எனப்படுகிறது.
4. கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை
எழுதுக.
விடை:
அ) NaOH எத்தனாலிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை.
ஆ) எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2
வெளியிடும் வினை.
இ) எத்தனால் அமில பொட்டாசியம் டை குரோமேட்டுடன் புரியும் ஆக்ஸிஜனேற்ற வினை.
ஈ) எத்தனாலின் எரிதல் வினை.
5. சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக.
விடை:
ஒரு சோப்பு மூலக்கூறு நீரில் இரு வேதிப் பகுதிகளாக மாறுகிறது. ஒரு
முனை சிறியதலை போன்ற கார்பாக்சிலேட் பகுதியையும் மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான
ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடர்புடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது.
முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள
அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது.
நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது. நீரை
விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது. சோப்பு (அ)
டிடர்ஜெண்ட்டை நீரில் கரைக்கும் போது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து
கொத்துகளாக மீசெல்ஸ் உருவாகிறது.
இந்த கொத்துகளில் ஹைட்ரோ கார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக்
கொள்கிறது. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கை சுற்று கொள்கிறது. சோப்பின்
கார்பாக்ஸிலேட் பகுதி கொத்துகளை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு
சோப்பினால் நீக்கப்படுகிறது.
X. உயர் சிந்தனை வினாக்கள் : (HOTS)
1. ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்பாடு C4H10O அதில் -OH இட
எண் 2. (அ) அதனுடைய அமைப்பு வாய்பாட்டை எழுதுக.
(ஆ) IUPAC பெயரினை எழுதுக.
பியூட்டன் - 2 ஆல் (அ) 2 - பியூட்டனால்
இ) இச்சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?
இச்சேர்மம் நிறைவுற்ற சேர்மம். ஏனென்றால் அனைத்து கார்பன் அணுக்களும்
ஒற்றைப் பிணைப்பை மட்டுமே கொண்டுள்ளது.
2. ஒரு கரிமச் சேர்மம் 'A' என்பதன்
மூலக்கூறு வாய்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய
மணமுடைய சேர்மம் ஐ தருகிறது.
(அ) சேர்மம் 'A' யைக் கண்டறிக.
சேர்மம் 'A' என்பது எத்தனாயிக்
அமிலம் –CH3COOH [C2H4O2]
(ஆ) சேர்மம் 'B' உருவாதல் வினையினை எழுதுக.
சேர்மம் ‘B' CH3 COOC H2CH3
→ எத்தில் எத்தனோயேட்
இ) இந்நிகழ்விற்கு பெயரிடுக.
எஸ்டராக்குதல்: ஏனென்றால் எத்தில் எத்தனோயேட் என்பது ஒரு எஸ்டர்
ஆகும்.