கரிமச்சேர்மங்களுக்கு
பெயரிடுதல்
முந்தைய காலங்களில் கரிமச்
சேர்மங்கள் எங்கிருந்து இயற்கையாக பெறப்படுகிறதோ அதன் பெயரையே கரிமச் சேர்மங்களின்
பெயராகச் சூட்டினர். உதாரணமாக பார்மிக் அமிலம் சிவப்பு எறும்புகளிலிருந்து
வடிகட்டிப் பெறப்பட்டது. எறும்பின் லத்தீன் பெயர் பார்மிக்கா. எனவே பார்மிக்
அமிலம் என்ற பெயர் இலத்தீன் மொழியிலிருந்து உருவானது. பின்பு கரிமச் சேர்மங்களை
இயற்கையாக கிடைப்பதை தவிர மற்ற முறைகளிலும் தயாரிக்கத் தொடங்கினர். எனவே அறிவியலாளர்கள்
கரிமச் சேர்மங்களின் அமைப்பைப் பொறுத்து அதற்கு முறையாகப் பெயரிடும் விதிகளை
வகுத்தனர். அடிப்படை மற்றும் பயன் சார்ந்த வேதியியலின் பன்னாட்டுச் சங்கம் (The International Union of Pure
and Applied Chemitry (IUPAC) ) வேதிச்சேர்மங்களுக்கு பெயரிடுவதற்கு ஒரு பொதுவான முறையைக் கொண்டு
வந்தது.
IUPAC பரிந்துரைகளின்
படி ஒரு கரிமச் சேர்மத்தின் பெயரில் மூன்றுப்பகுதிகள் அமைந்திருக்கும்.
1. அடிப்படைச் சொல்
2. முன்னொட்டு (துவக்கும் சொல்)
3. பின்னொட்டு
(முடியும் சொல்)
இந்த மூன்று பகுதிகளையும்
கீழ்கண்டவாறு இணைத்து ஒரு IUPAC
பெயரை உருவாக்கலாம்.
1. அடிப்படைச் சொல்: இது கார்பனின் கட்டமைப்பை விளக்கும் அடிப்படை அலகு ஆகும். இது
சேர்மத்தின் சங்கிலி தொடரில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
கார்பன் சங்கிலியில் இருக்கும் கார்பன் எண்ணிக்கையை பொறுத்து கிரேக்க எண் பெயரை
பயன்படுத்தி (முதல் நான்கை தவிர) வருவிக்கப்படுகிறது. முதல் 10 ஹைட்ரோ
கார்பன்களின் IUPAC பெயர் அட்டவணை 11.3
ல் கொடுக்கப்பட்டுள்ளது.
2. முன்னொட்டு: ஹைட்ரோ கார்பன்களின் தாய்வழிச் சங்கிலித்தொடரில்
பிணைக்கப்பட்டுள்ள பதிலி மற்றும் கிளைகளை குறிக்கிறது. ஹைட்ரஜனை தவிர கார்பன்
சங்கிலியில் மற்ற அணுக்கள் மற்றும் அணுத் தொகுதிகளுக்கு பதிலிகள் என்று பெயர்.
அட்டவணை 11.4 ல் கரிமச்
சேர்மங்களின் முக்கிய பதிலிகள் மற்றும் அதன் முன்னொட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. பின்னொட்டு: இது கரிமச் சேர்மத்தின் பெயரின் இறுதியில் வருவது. இது இரண்டு
பகுதியாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதன்மை பின்னொட்டு , மற்றும் இரண்டாம்
நிலை பின்னொட்டு ஆகும். முதன்மை பின்னொட்டானது மூலச் சொல்லை தொடர்ந்து வரும்.
தாய்வழிச் சங்கிலி தொடரில் உள்ள கார்பன் கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை குறிக்கிறது. அனைத்து பிணைப்புக்களும் ஒற்றை பிணைப்பாயிருந்தால் “யேன்” என்ற பின்னொட்டும், இரட்டை பிணைப்பாயிருந்தால் "ஈன்" என்ற பின்னொட்டு, முப்பிணைப்பாயிருந்தால் “ஐன்” என்ற பின்னொட்டும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் நிலை பின்னொட்டு கரிமச் சேர்மத்திலுள்ள வினைச் செயல் தொகுதியைக் குறிப்பிடுகிறது.
� விதி 1 : அடிப்படைச் சொல்லை
தேர்ந்தெடுக்கும் விதமாக நீண்ட கார்பன் சங்கிலி தொடரை கண்டறிய வேண்டும்.
� விதி 2 : பதிலி அல்லது
வினைச் செயல் தொகுதி அண்மையில் அமையும் விதமாக தாய் சங்கிலியின் கார்பன்
அணுக்களுக்கு எண்ணிட வேண்டும். இதற்கு இட எண்கள் என்று பெயர். வினைச்செயல் தொகுதி
மற்றும் பதிலி இரண்டும் இருந்தால் வினைச் செயல் தொகுதிக்கு முன்னுரிமை வழங்கப்பட
வேண்டும்.
� விதி 3 : அல்கீன்கள்
மற்றும் அல்கைன்களை பொறுத்த வரையில் இரட்டை மற்றும் முப்பிணைப்பின் இடம்
கண்டறியப்பட்டு, அந்த இட எண்ணை தொடர்ந்து கோடு மற்றும்
முதன்மை நிலை பின்னொட்டை குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்புகளானது
(இரட்டை அல்லது முப்பிணைப்பு) சிறிய இட எண்ணை பெறுமாறு தாய்ச் சங்கிலியில் கார்பன்
அணுக்களுக்கு எண்ணிடல் வேண்டும்.
� விதி 4 : கரிமச்
சேர்மத்தில் வினைச்செயல் தொகுதி இருந்தால் அந்த இடம் கண்டறியப்பட்டு இட எண்ணுக்கு
பின்னால் கோடு மற்றும் இரண்டாம் நிலை பின்னொட்டை குறிப்பிட வேண்டும்.
� விதி 5 : முதன்மை
பின்னொட்டு மற்றும் இரண்டாம் நிலை பின்னொட்டு சேர்க்கப்பட்டு பிறகு முதன்மை
பின்னொட்டில் இருக்கும் ‘e’ நீக்கப்பட வேண்டும்.
� விதி 6 : பதிலியின் இடம்
கண்டறியப்பட்டு இட எண்ணை தொடர்ந்து கோடு மற்றும் பதிலியை குறிக்கும் முன்னொட்டு
குறிப்பிட வேண்டும்.
சில நேரான மற்றும் கிளைத்தொடர்
ஹைட்ரோ கார்பன்களுக்கு IUPAC
விதிகளை பயன்படுத்தி பெயரிடுதலைப் பார்ப்போம்.
எ.கா 1 : CH3-CH2-CH2-CH2-CH3
படி 1:
இது ஐந்து கார்பன் இருக்கும் சங்கிலி தொடர். எனவே அடிப்படைச் சொல் 'பென்ட்' என எடுத்துக்கொள்வோம். (விதி 1)
படி 2:
கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை
பிணைப்பு உடையதாக இருக்கிறது. எனவே “யேன்” என்ற பின்னொட்டை சேர்க்க வேண்டும். எனவே IUPAC பெயர்
பென்ட் + யேன் = பென்டேன்
எ.கா 2:
படி 1:
நீண்ட சங்கிலித்தொடரில் ஐந்து கார்பன் அணுக்கள் இருக்கின்றன. எனவே
மூலவார்த்தை ‘பென்ட்’ என எடுத்துக்
கொள்வோம்.
படி 2:
இங்கு பதிலிகள் இருக்கின்றன. எனவே கார்பன் சங்கிலியில் பதிலிகள் மிக
அண்மையில் அமையும் விதமாக இடது பக்கத்திலிருந்து எண்ணிடுதலை தொடங்க வேண்டும்.
(விதி 2)
படி 3 :
எல்லா கார்பன் அணுக்களும் ஒற்றை பிணைப்புடையதாய் இருப்பதால் 'யேன்’ என்ற பின்னொட்டை சேர்க்க வேண்டும்.
படி 4 :
பதிலியாக இருக்கும் மெத்தில் தொகுதி இரண்டாவது கார்பன் அணுவுடன்
இணைந்துள்ளதால் அதற்குரிய இட எண்ணை கொடுக்க வேண்டும். இங்கு இட எண் 2 எனவே முன்னொட்டு 2 மெத்தில் ஆகும். (விதி 6)
2 மெத்தில் +
பென்ட் + யேன் = 2 - மெத்தில் பென்டேன்
எ.கா 3 :
படி 1 :
நீளமான கார்பன் சங்கிலித் தொடரில் ஏழு கார்பன் அணுக்கள்
இருக்கின்றன. எனவே அடிப்படைச் சொல் ‘ஹெப்ட்’ என எடுத்துக்கொள்வோம்.
படி 2 :
இங்கு ஒரு பதிலி இருக்கிறது. எனவே கார்பன் கார்பன் சங்கிலியில்
பதிலிகள் அண்மையில் அமையும் விதமாக எண்ணிடுதலை தொடங்க வேண்டும் (விதி 2)
படி 3 :
எல்லா கார்பன் அணுக்களும் ஒற்றை பிணைப்பு உடையதாக இருப்பதால் யேன்
என்ற பின்னொட்டைச் சேர்க்க வேண்டும்.
படி 4 :
பதிலியாக இருக்கும் மெத்தில் தொகுதி மூன்றாவது கார்பன் அணுவுடன்
இணைந்து உள்ளது. எனவே இட எண் 3. எனவே முன்னொட்டு 3 - மெத்தில் எனவே சேர்மத்தின் பெயர் 3 - மெத்தில் +
ஹெப்ட் + யேன் = 3 - மெத்தில் ஹெப்டேன்
எ.கா 4: CH3-CH2-CH2-CH=CH2
படி 1:
இது ஐந்து கார்பன் இருக்கும் சங்கிலி தொடர். எனவே அடிப்படைச் சொல் 'பென்ட்' என எடுத்துக்கொள்வோம் (விதி 1).
படி 2:
கார்பனுகளுக்கிடையே இரட்டை பிணைப்புகள் இருப்பதால் "ஈன் என்ற
பின்னொட்டை சேர்க்க வேண்டும்.
படி 3:
இரட்டை பிணைப்பு இருக்கும் கார்பன் அணுவிற்கு சிறிய எண் கிடைக்கும்
வகையில் எண்ணிடுதலை ஆரம்பிக்க வேண்டும் (விதி 3)
படி 4:
இரட்டை பிணைப்பில் இருக்கும் கார்பன் அணுவின் இட எண் 1. எனவே பின்னொட்டு 1- ஈன் ஆகும். சேர்மத்தின் பெயர்
பென்ட் + (1 - ஈன்) = பென்ட்
- 1 - ஈன் என எழுதலாம்.
எ.கா 1: CH3-CH2-CH2-OH
படி 1 :
இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித்தொடர். எனவே அடிப்படைச்சொல்
புரப் ஆகும்.
படி 2 :
கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்புகளாக
இருப்பதால் யேன் என்ற முதன்மை பின்னோட்டை சேர்க்க வேண்டும்.
படி 3 :
கார்பன் சங்கிலியில் - OH தொகுதி இருப்பதால்
இது ஒரு ஆல்கஹால். எனவே - OH தொகுதி அண்மையில் அமையும்
விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலை தொடங்க வேண்டும். (விதி 3)
படி 4 :
OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம் நிலை
பின்னொட்டாக 1 - ஆல் சேர்க்க வேண்டும். எனவே சேர்மத்தின்
பெயர்
புரப் + யேன் + (1 - ஆல்) = புரப்பேன்-1- ஆல்
எ.கா 2: CH3COOH
படி 1 :
இது இரண்டு கார்பன் இருக்கும் சங்கிலி தொடர். எனவே அடிப்படைச் சொல் ‘எத்’ என எடுத்துக்கொள்ளப்படுகிறது.
படி 2 :
கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்பாய்
இருப்பதால் 'யேன்’ என்ற பின்னொட்டை
சேர்க்க வேண்டும்.
படி 3 :
கார்பன் சங்கிலியின் - COOH தொகுதி இருப்பதால்
இது ஒரு கார்பாசிலிக் அமிலம். எனவே இரண்டாம் நிலை பின்னொட்டாக ‘ஆயிக் அமிலம்’ என்ற பின்னொட்டைச் சேர்க்க வேண்டும்.
எனவே சேர்மத்தின் பெயர்
எத் + யேன் + ஆயிக் அமிலம் =
எத்தனாயிக் அமிலம்
அட்டவணை 11.6 ல் பல்வேறு
கரிமச் சேர்மங்களுக்குரிய IUPAC பெயர் பட்டியலிடப்படுகிறது.
உன்னைச்
சோதித்துப் பார்:
கீழ்கண்ட சேர்மங்களுக்கு IUPAC முறையில்
பெயரினை எழுதுக.
(அ) CH3CHO
(ஆ) CH3CH3COCH3
(இ) ClCH2-CH2-CH2-CH3