கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra
பயிற்சி 2.1
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) a, b, c,... x, y, z ஆகிய எழுத்துகள் _______குறிப்பதற்குப் பயன்படுகின்றன.
விடை : மாறிகள்
(ii) 'f' இலிருந்து 5 ஐக் குறைத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று________________
விடை : f – 5
(iii) 'S ' ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று_____________
விடை : S/5
(iv) தற்போது 'A' இன் வயது 'n' எனில் 7 ஆண்டுகளுக்கு முன்பு 'A' இன் வயது__________
விடை : n – 7
(v) 'p – 5' ஆனது 12 எனில் 'p' இன் மதிப்பு___________
விடை : 17
2. சரியா, தவறா எனக் கூறுக.
(i) எழுதுகோலின் 'B' பகுதியின் நீளம் 'a – 6'. [தவறு]
(ii) இன் விலை‘x' மற்றும் இன் விலை ₹5 எனில், இவ்விரு பழங்களின் மொத்த விலை ' ₹x + 5' ஆகும். [சரி]
(iii) c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று ‘10c + 3’ ஐக் குறிக்கிறது. [தவறு]
(iv) 10 அரிசிப் பைகளின் விலை ₹ ‘t’ எனில் 1 அரிசிப் பையின் விலை ₹’t/10’ஆகும் . [சரி]
(v) q மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q. [சரி]
3. அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.
4. அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.
விடை :
அறிவழகன் தந்தையின் வயதை X ஆண்டுகள் என்க.
கணக்கின் படி, அறிவழகனின் வயது = (X – 30) ஆண்டுகள்
5. 'u' என்பது இரட்டை எண் எனில் பின்வருவனவற்றை எவ்வாறு குறிப்பிடுவாய்?
(i) 'u' இன் அடுத்த இரட்டை எண் எது?
(ii) 'u' இன் முந்தைய இரட்டை எண் எது?
விடை : (i) u + 2 (ii) u – 2
6. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.
(i) ‘t' உடன் 100 ஐக் அதிகரிக்க.
விடை : t + 100
(ii) 'q' இன் 4 மடங்கு
விடை : 4q
(v) 'y' இன் 9 மடங்கிலிந்து 4 ஐக் குறைக்க.
விடை : 9y – 4
7. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக.
(i) x ÷ 3
விடை : X ஐ 3ஆல் வகுக்க
(ii) 11 + 10x
விடை : X இன் 10 மடங்குடன் 11 ஐக் கூட்டுக
(iii) 70S
விடை : 70 மற்றும் S இன் பெருக்கல்
8. ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் "ஓர் எண்ணை விட 8 அதிகம்" என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி '8 + x' எனவும், மாறன் '8x' எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?
விடை : வெற்றியின் விடை சரியானது
9. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
(i) 'g' ஆனது 300 எனில், 'g – 1' மற்றும் 'g + 1 ' இன் மதிப்பு யாது?
விடை :
g = 300
g – 1 = 300 – 1 = 299
g + 1 = 300 + 1 = 301
(ii) ‘2S–6' ஆனது 30 எனில், ‘S ’இன் மதிப்பு யாது?
விடை :
2S – 6 = 30
2S = 30 + 6
2S = 36
S = 36/2
S = 18
10. பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் 'k/3' இன் மதிப்பு 5 எனில் 'k' இன் மதிப்பைக் காண்க.
விடை :
புறவய வினாக்கள்
11. மாறி என்பதன் பொருள்
அ) சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
ஆ) நிலையான மதிப்பைக் கொண்டது
இ) வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
ஈ) 8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
[விடை : இ) வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது]
12. 'w' வாரங்களில் உள்ள நாள்களின் எண்ணிக்கை
(அ) 30 + w
ஆ) 30 w
(இ) 7 + w
(ஈ) 7 w
[விடை : (ஈ) 7 w]
13. வட்டத்தில் 'x' இன் மதிப்பு
(அ) 6
(ஆ) 8
(இ) 21
(ஈ) 22
[விடை : (ஈ) 22]
14. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு
(அ) y = 5
(ஆ) y = 6
(இ) y = 7
(ஈ) y = 8
[விடை : (ஆ) y = 6 ]
15. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
(அ) n – 6 = 8
(ஆ) 6 – n = 8
(இ) 8 – n = 6
(ஈ) n – 8 = 6
[விடை : (அ) n – 6 = 8]