இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இயற்கணிதக் கூற்றுகளை அமைத்தல் | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra
இயற்கணிதக் கூற்றுகளை அமைத்தல்
ஒரு கூடையில் 'n' ஆப்பிள்கள் உள்ளதாகக் கொள்க. அதனுடன் 5 ஆப்பிள்களைச் சேர்க்க கூடையில் மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?
மொத்த ஆப்பிள்களின் எண்ணிக்கையை 'n + 5' என எளிதாக எழுதலாம். 'n + 5' என்ற இயற்கணிதக் கூற்று முன்பு இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதனுடன் 5 ஆப்பிள்கள் கூடுதலாக இருப்பதைக் குறிக்கிறது.
இதைப் போன்றே,
● ஒரு பேருந்தில் ‘x' எண்ணிக்கையில் மக்கள் பயணிக்கின்றனர். 2 நபர் மேலும் பேருந்தில் ஏறினால் ‘x + 2' மக்கள் பேருந்தில் இருப்பர்.
● ஒரு வெண்ணெய்க் கட்டியின் நிறை 'w' கிராம். அக்கட்டியிலிருந்து 100 கிராம் அளவு வெட்டி எடுக்கப்பட்டால் மீதி 'w–100 ' கிராம் இருக்கும்.
● ஓர் எண்ணை ‘y' எனக் குறிப்பிட்டால், அதன் இருமடங்கை ‘2y' எனக் குறிக்கலாம். (2y என்பது 'y' ஐ 2 ஆல் பெருக்குவது ஆகும்.)
1. இயற்கணிதக் கூற்றுகளை வாக்கியங்களாக மாற்றுதல்.
கீழ்க்காணும் அட்டவணையில் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
இதேபோன்று வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதலாம்.
இவற்றை முயல்க
2. வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக மாற்றுதல்
கீழ்க்காணும் அட்டவணையில் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
இவற்றை முயல்க