பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra
இயல் 2
இயற்கணிதம் – ஓர் அறிமுகம்
கற்றல் நோக்கங்கள் :
● எண்கள் மற்றும் வடிவியல் சார்ந்த அமைப்புகளை விவரித்தல், விரிவாக்குதல் மற்றும் உருவாக்குதல்.
● அமைப்புகளின் தன்மையைக் கணித்து, தொடர் அமைப்புகளை ஆராய்தல்.
● அமைப்புகளில் 'மாறிகளின்' இன் பங்கினைப் புரிந்துக்கொள்ளுதல்.
● எளிய இயற்கணிதக் கோவைகளிலும், சமன்பாடுகளிலும் மாறிகளைப் பயன்படுத்தித் தொடர்புகளை விளக்குதல்.
அறிமுகம்
எண் விளையாட்டுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? பின்வரும் படிகளைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.
உன்னுடைய விடை 10 தானா? வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஒரே விடை கிடைத்துள்ளதா? நீ நினைத்த எண்ணும் உன் நண்பர் நினைத்த எண்ணும் ஒரே எண் தானா என்பதை சரிபார்த்தால் வியப்பாக உள்ளது அல்லவா? தொடங்கும் எண்ணை அல்லது அல்லது என பின்னங்களாக எடுத்துக்கொண்டால் விடை என்னவாக அமையும்?
இந்த விளையாட்டை எந்த எண்ணில் தொடங்கினாலும் விடை 10 ஆகத்தான் அமையும்.
இரண்டு எண்களைக் கொண்டு இவ் விளையாட்டை சரிபார்ப்போம்.
● தொடங்கும் முதல் எண் 4 எனில்,
● தொடங்கும் முதல் எண் 9 எனில்,
வேறுபட்ட எண்களுக்கு ஒரே எண் விடையாக எவ்வாறு கிடைக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?
இயற்கணிதம் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படுகிறது. அவற்றுள் சில,
● பொருள்களின் விலைகளுக்கு ஏற்ப அதன் எண்ணிக்கையைக் காணுதல்.
● கடந்து சென்ற தொலைவினை, வேகம் மற்றும் நேரம் மூலம் எழுதுதல்.
● மைல்களைக் கிலோமீட்டராகவும், கிராமைக் கிலோகிராமாகவும் மாற்றுதல் போன்றவை.
● சுற்றளவின் நீளங்களை நூல் கொண்டு அளத்தல், முள்கம்பி வேலியால் ஆன தோட்டத்தின் நீளத்தை அளத்தல்.
● பூங்காவின் பரப்பளவைக் காணுதல்.
● தொடர் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காணுதல்.
எங்கும் கணிதம் – அன்றாட வாழ்வில் இயற்கணிதம்