இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - மாறிகளின் மீதான செயலிகளைப் புரிந்து கொள்ளுதல் | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra
மாறிகளின் மீதான செயலிகளைப் புரிந்து கொள்ளுதல்
கீழே உள்ள சூழ்நிலையை உற்று நோக்கவும்.
சூழ்நிலை 1
தங்கை நிலாவின் வயதைக் காட்டிலும் மூன்று வயது பெரியவன் மதி. நிலாவின் வயது நமக்குத் தெரியும் எனில், மதியின் வயதைக் காண முடியுமா?
நிலாவின் வயது 'n' எனில், மதியின் வயது எப்போதுமே 'n + 3' ஆக இருப்பதைக் காண முடியும். இதுவே மாறிகள் பயன்படுத்துவதின் சிறப்பாகும். வயது மாற்றத்திற்கு வெவ்வேறு கூற்று பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. 'n' இன் மதிப்பு மாறும்போது 'n + 3' இன் மதிப்பும் மாறுகிறது. இங்கு 3 என்பது ஒரு மாறிலியாகும்.
இதனைப் பின்வரும் அட்டவணையில் தெளிவாகக் காண முடிகிறது.
சூழ்நிலை 2
பனி இனிப்புக் (ஐஸ்) குச்சிகளைப் பயன்படுத்தி அமைப்புகளை உருவாக்குதல்
பாரி மற்றும் மணிமேகலை இருவரும் பனி இனிப்புக் (ஐஸ்) குச்சிகளைக் கொண்டு சில அமைப்புகளை உருவாக்குகின்றனர்.
ஒரு 'T' உருவாக்க எத்தனைக் குச்சிகள் தேவைப்படும்? (2 குச்சிகள்)
இரண்டு 'T' உருவாக்க எத்தனைக் குச்சிகள் தேவைப்படும்? (4 குச்சிகள்)
தொடர்ந்து குச்சிகளைப் பயன்படுத்திப் பின்வரும் அட்டவணையைத் தயார் செய்யலாம்.
மேலேயுள்ள அட்டவணையிலிருந்து, தேவையான 'T' இக்களின் எண்ணிக்கை k எனில்,
தேவையான பனி இனிப்புக் குச்சிகளின் எண்ணிக்கை k × 2 = 2k. இங்கு k என்பது மாறியாகும்.
இவற்றை முயல்க
பின்வரும் உருவங்களை அமைக்க எத்தனை பனி இனிப்புக் குச்சிகள் தேவைப்படும்? மாறியின் விதியை எழுதுக.
(i) C இன் அமைப்பு
(ii) M இன் அமைப்பு