இயற்கணிதம் – ஓர் அறிமுகம் | பருவம் 1 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - எடுத்துக்காட்டுகளில் இடம்பெறும் தெரியாத எண்களைக் காணுதல் | 6th Maths : Term 1 Unit 2 : Introduction To Algebra
எடுத்துக்காட்டுகளில் இடம்பெறும் தெரியாத எண்களைக் காணுதல்
கீழ்க்காணும் கட்டங்களை நிரப்புக.
இங்கு, என்பது தெரியாத எண்ணைக் குறிக்கும்.
இந்தச் சமன்பாடுகளைப் பொருளுடையதாக மாற்ற, முதல் கட்டத்தில் 5, இரண்டாவது கட்டத்தில் 7 மற்றும் 3 ஆவது கட்டத்தில் 6 ஆகிய எண்கள் இடம் பெறுதல் வேண்டும்.
இவற்றை முயல்க
தெரியாதவற்றைக் கண்டுபிடி
(i) 37 + 43 = 43 + 37
(ii) (22 + 10) + 15 = 22 + (10 + 15)
(iii) 7 × 46 = 322 எனில் 46 × 7 = 322
எடுத்துக்காட்டு 2.1
ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து,
இதனை, ‘x – 6' என எழுதலாம். இங்கு ‘x' என்பது தெரியாத எண் ஆகும்.
அடுத்ததாக, x இல் எம்மதிப்பை பிரதியிட்டால், 'x – 6' ஆனது 10 ஐத் தரும் எனக் கண்டறிவோம்.
எனவே, தெரியாத எண் 'x' (மாறி) ஆனது 16 ஆகும்.
இவற்றை முயல்க
m + 4 இன் கூடுதல் 9 எனப் பெற உரிய 'm' இன் மதிப்பைக் காண்க.
எடுத்துக்காட்டு 2.2
அதியன் மற்றும் முகிலன் இருவரும் உடன் பிறந்தவர்கள். அதியனின் வயது 'p'. முகிலன், அதியனை விட 6 வயது மூத்தவன் என்பதை இயற்கணிதக் கூற்றாக எழுதுக. அதியனின் வயது 20 எனில், முகிலனின் வயது என்ன?
அதியனின் வயது = 'p'
முகிலனின் வயது = 'p + 6' (இயற்கணிதக் கூற்று)
p = 20, எனில், முகிலனின் வயது = 20 + 6
= 26 வயது.