கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | முதல் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.2 (சாய்சதுரத்தின் பரப்பளவு) | 7th Maths : Term 1 Unit 2 : Measurements
பயிற்சி: 2.2
1. படத்தில் உள்ள சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
i) கொடுக்கப்பட்டவை d1 = 16 செ.மீ, d2 = 8 செ.மீ
பரப்பு = 1/2 × d1 × d2 ச.அ
= 1/2 × 16 × 8
பரப்பு = 64 செ.மீ2
ii) கொடுக்கப்பட்டவை b = 15 செ.மீ
h = 11 செ.மீ
பரப்பு = bh ச.அ
= 15 × 11
பரப்பு = 165 செ.மீ2
2. அடிப்பக்கம் 14 செ.மீ, உயரம் 9 செ.மீ உம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை b = 14 செ.மீ, h = 9 செ.மீ
சாய்சதுரத்தின் பரப்பு = bh ச.அ
= 14 × 9
பரப்பு = 126 செ.மீ2
3. விடுபட்ட விவரத்தினைக் கண்டறிக.
தீர்வு :
i) கொடுக்கப்பட்டவை d1 = 19 செ.மீ,
d2 = 16 செ.மீ
பரப்பு = 1/2 × d1 × d2 ச.அ
= 1/2 × 19 × 16
பரப்பு = 152 செ.மீ2
ii) கொடுக்கப்பட்டவை d1 = 26 மீ,
பரப்பு = 468 ச.மீ
பரப்பு = 1/2 × d1 × d2 ச.அ
1/2 × 26 × d2 = 468
d2 = 468 / 13
d2 = 36 செ.மீ
iii) கொடுக்கப்பட்டவை d2 = 12 மி.மீ,
பரப்பு = 180 மி.மீ2
பரப்பு = 1/2 × d1 × d2 ச.அ
1/2 × d1 × d2 = 180
1/2 × d1 × 12 = 180
d1 = 180 / 6
d1 = 30 மி.மீ
4. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச.செமீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலை விட்டத்தின் அளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை பரப்பு = 100 செ.மீ2
d1 = 8 செ.மீ, d2 = ?
சாய்சதுரத்தின் பரப்பு = 1/2 × d1 × d2 ச.அ
1/2 × d1 × d2 = 100
1/2 × 8 × d2 = 100
d2 = 100 / 4
d2 = 25 செ.மீ
5. ஓர் இனிப்பு வகை சாய்சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் முறையே, 4செ.மீ மற்றும் 5செ.மீ. இனிப்பின் மேற்பரப்பு முழுவதும் மெல்லிய அலுமினியத் தகட்டால் மூடப்பட வேண்டும். 100 ச.செ.மீக்கு ₹7 வீதம் மொத்தம் 400 இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட எவ்வளவு செலவாகும்?
தீர்வு :
கொடுக்கப்பட்டவை d1 = 4 செ.மீ, d2 = 5 செ.மீ
சாய்சதுர வடிவ இனிப்பின் பரப்பு = 1/2 × d1 × d2 ச.அ
= 1/2 × 4 × 5
= 10 ச.செ.மீ2
400 இனிப்பின் பரப்பு = 10 × 400 ச.செ.மீ2
= 4000 ச.செ.மீ2
இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட 100 ச.செ.மீ க்கு = ₹7
இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட 4000 ச.செ.மீக்கு = ₹7 × 40
= ₹280
கொள்குறி வகை வினாக்கள்
6. பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
i) 7 ச.செ.மீ
ii) 24 ச.செ.மீ
iii) 12 ச.செ.மீ
iv) 10 ச.செ.மீ
விடை : iii) 12 ச.செ.மீ
7. இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
i) 64 ச.செ.மீ
ii) 32 ச.செ.மீ
iii) 30 ச.செ.மீ
iv) 16 ச.செ.மீ
விடை : ii) 32 ச.செ.மீ
8. பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
i) 12 செ.மீ
ii) 8 செ.மீ
iii) 4 செ.மீ
iv) 20 செ.மீ
விடை : ii) 8 செ.மீ
9. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்
i) 8மீ
ii) 10 மீ
iii) 2 மீ
iv) 4 மீ
விடை : iv) 4 மீ
10. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்
i) 120°
ii) 180°
iii) 90°
iv) 100°
விடை : iii) 90°
விடைகள்
பயிற்சி 2.2
1. (i) 64 செ.மீ2 (ii) 165
2. 126 செ.மீ2
3. (i) 152 செ.மீ2 (ii) 36 செ.மீ (iii) 30
4. 25
5. ₹ 280
Objective type questions
6. (iii) 12
7. (ii) 32 s
8. (ii) 8
9. (iv) 4
10. (iii) 90°