அளவைகள் | முதல் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 2 : Measurements
பாடச்சுருக்கம்
● எதிர்ப் பக்கங்கள் இணையாகவும், சமமாகவும் உள்ள நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு மூடிய வடிவம் இணைகரம் எனப்படும்.
● இணைகரத்தின் பரப்பளவு = b × h ச.அலகுகள், இங்கு b = அடிப்பக்கம்; h = உயரம்.
● ஓர் இணைகரத்தில் அனைத்துப் பக்கங்களும் சமமாக இருந்தால் அது சாய்சதுரம் எனப்படும்.
● சாய்சதுரத்தின் பரப்பளவு = 1/2 × d1 × d2 ச.அலகுகள். இங்கு d1, d2 என்பன மூலை விட்டங்கள்.
● ஓர் இணைகரத்தில் ஒரு சோடி இணையில்லாத பக்கங்கள் இருப்பின் அது ஒரு சரிவகம் எனப்படும்.
● சரிவகத்தின் பரப்பளவு = 1/2 × h (a+b) ச.அலகுகள். இங்கு a, b ஆகியவை இணைப்பக்கங்கள், மற்றும் h என்பது உயரம் ஆகும்.
● சரிவகத்தின் இணையற்ற பக்கங்கள் சமமாக இருப்பின், அது ஓர் இருசமபக்கச் சரிவகம் எனப்படும்.
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி -1:
கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ-ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - அளவைகள்” என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். பணித்தாளின் வலது பக்கத்தில் நீளம், அகலம் மற்றும் கோணம் இவற்றை மாற்றுவதற்கு மூன்று நழுவல்கள் உள்ளன.
படி - 2:
நழுவலை நகர்த்திக் கிடைக்கப்பெறும் வடிவங்களான இணைகரம் அல்லது செவ்வகம் அல்லது சதுரத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிகளை உற்றுநோக்குக.
செயல்பாட்டிற்கான உரலி
அளவைகள் : https://ggbm.at/zzvqg9vh
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.